பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்கும் பிரபலம் இவர்தான்!.. பேரு கெட்டு போவலைனா சரி!.
ரசிகர்களின் மத்தியில் ஒரு திரைப்படம் எவ்வாறு வரவேற்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும்.
அந்த வகையில் உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். தற்போது பிக் பாஸ் இந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழ் மொழியிலும் நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அவர் பிக் பாஸ் விட்டு தான் விலகுவதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது வரும் சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இவர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
மேலும் அவருக்கு உரிய தனித்துவமான திறமையின் மூலம் அந்நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்திச் சென்றார். மேலும் அந்நிகழ்ச்சியில் அவருடைய சினிமா அனுபவம் மற்றும் பல புத்தகங்களை பற்றி மக்களுக்கு கூறி வந்தார்.

வாரத்தில் சனி ஞாயிறு என்ற இரு எபிசொட்டில் வரும் கமல்ஹாசனை பார்க்க மக்கள் காத்துக் கொண்டு இருப்பார்கள். மேலும் அந்த இரு நாட்களிலும் அவர் போட்டியாளர்களுக்கு கொடுக்கும் அறிவுரை மற்றும் மக்களுக்கு கூறும் தகவல்கள் என நிகழ்ச்சி சுவாரசியமாக செல்லும்.
இந்நிலையில் கடந்த 7 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கமல்ஹாசன் தற்பொழுது சமீபத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தான் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதாகவும், கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக தன்னால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என தெரிவித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் குழுவினருக்கு என்னுடைய நன்றிகள் என தெரிவித்திருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலம்
இந்நிலையில் பலரும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யாரு என்ற கேள்விகளை முன்வைத்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் 7 சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல் உடல்நிலையில் குறைவு ஏற்பட்ட போது சிம்பு அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஒருவேளை அவர் தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மற்றொரு பிரபலத்தின் பெயரும் அடிப்பட்டு வருகிறது.

தற்பொழுது மக்கள் செல்வனாக அனைவராலும் ரசிக்கக்கூடிய நடிகர் விஜய் சேதுபதி. அவர் பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தும் விதமும், அவர் கூறும் கருத்தும் மக்களுக்கு பிடித்து போகிறது. எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தற்போது தான் பல வெற்றி படங்களை அவர் கொடுத்து வருகிறீர்கள். நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டாம் என அவரின் ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.