News
கடலுக்குள் போக இருக்கும் சென்னை நகரம்!.. காத்திருக்கும் ஆபத்து!.
சமீப காலங்களாக உலகின் பல்வேறு இடங்களிலும் நாம் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
நவீன கால மாற்றத்தின் காரணமாக மனிதர்களால் பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வந்தாலும், இயற்கையை கட்டுப்படுத்தும் அளவிற்கு எந்த ஒரு அறிவியல் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட பல இயற்கை நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், உலகின் பல்வேறு இடங்களிலும் எரிமலை வெடிப்பு, சுனாமி, நிலச்சரிவு, மேக வெடிப்பு, பருவநிலை மாறுதல் போன்ற பல நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டின் முக்கிய நகரமான சென்னை கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கடலில் மூழ்கப்போகும் சென்னை
தற்போது சிறிய மழை பெய்தாலும் சென்னையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்கையில் ஒரு சிறிய மழையை கூட சென்னை நகரத்தால் தாங்க முடியாத அளவிற்கு சென்னையில் சில திட்டமிட்ட வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை நகரத்தில் பல்வேறு கட்டுமான வசதிகள் போன்றவை வளர்ச்சி அடைந்து கொண்டு வந்தாலும், திட்டமிட்ட வளர்ச்சி இருக்கிறதா? என்று கேட்டால் அவ்வாறு இல்லாத காரணத்தால் மழை பெய்யும் போது சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இந்நிலையில் வரும் ஆண்டுகளில் அதிக மழை பெய்தால் சென்னை நகரம் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்து வருகிறார்.
சமூக ஆர்வலரின் கருத்து
வரும் 2050-க்குள் சென்னையில் உள்ள ஏழு சதவீத நிலப்பரப்பு கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர் பூவுலகின் நண்பர்கள் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் கூறியதாவது, அனைவரும் நினைப்பதாவது கடல் மட்டம் உயர்வு என்பது கடல் நீர் மட்டம் உயர்ந்து அப்படியே சென்னை மூழ்கும் என நினைக்கிறார்கள் ஆனால் அது அவ்வாறு கிடையாது.
சென்னையில் கொசஸ்தலை, அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் கடலில் சென்று சேருகிறது. இந்நிலையில் அதிக மழை பெய்யும் போது கடல் நீரின் பிஹெச் அளவும், ஆற்றின் பிஹெச் அளவும் ஒன்றாக இருக்கும் நிலையில் கடல் நீர் மட்டம் உயரும் போது இந்த ஆறுகள் பின்னோக்கி அப்படியே சென்னை நகரங்களில் புகுந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும்.
இந்த ஆறுகளின் பக்கத்தில் எந்தெந்த இடங்கள் இருக்கிறதோ அந்த இடங்களில் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழைநீர் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பகுதிகளில் எல்லாம் நாம் வீடு, சாலைகள் அமைத்திருக்கிறோம் அல்லது தொழிற்சாலை வைத்திருக்கிறோம் என்றால் நிச்சயம் இவை அனைத்தும் மூழ்கும் என அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
