Bigg Boss Tamil
மறுபடி மறுபடி சின்ன வீட்டுல தூக்கி போடுறாங்க! – கடுப்பான மாயா, விஷ்ணு..!
பிக்பாஸ் வீட்டில் வெற்றிகரமாக 3வது வாரம் தொடங்கியுள்ள நிலையில் யுகேந்திரன் வீட்டு தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அங்குள்ள ஹவுஸ்மேட்ஸ்களிலேயே வயது மூத்தவர் யுகேந்திரன் தான். மேலும் அவரது கருத்துகளை அமைதியாகவும், தெளிவாகவும் பேசக் கூடியவர். விக்ரம் சரவணன் போல குழம்பாமல் தெளிவாக முடிவு எடுக்கக் கூடியவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் புதிய தலைவர் வந்த பின் ஸ்மால் ஹவுஸிற்கு அனுப்பும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படியாக இந்த வாரமும் ஸ்மால் ஹவுஸ் செல்ல 6 பேரை யுகேந்திரன் தேர்ந்தெடுத்தார். அதில் ஏற்கனவே ஸ்மால் ஹவுஸில் இருந்து வரும் மாயா, விஷ்ணு, ப்ரதீப் ஆகியோர் மீண்டும் ஸ்மால் ஹவுஸ் வீட்டிற்கே அனுப்பப்பட்டுள்ளனர்.
புதிதாக விக்ரம் சரவணன், பூர்ணிமா, வினுஷா ஆகியோர் ஸ்மால் ஹவுஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் வினுஷா மட்டும் முதல் வாரமே ஸ்மால் ஹவுஸ் வீட்டில்தான் இருந்தார். ஏற்கனவே அவர் சமையலை தவிர எதுவும் செய்வதில்லை என பலரும் சொல்லி வந்ததால் இந்த முறை சமையற்கட்டில் ஏதாவது டாஸ்க் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரதீப்பிற்கு மக்கள் ஆதரவு கிடைத்தால் இந்த வீட்டை விட்டே போய் விடுவேன் என்று சொன்ன மாயா இப்போது சைலண்ட் மோடிற்கு சென்றுள்ளார். பல விஷயங்களில் விஷ்ணுவும், மாயாவும் யுகேந்திரனை கடுப்பு ஏற்றியிருந்ததால் அவர் அவர்களை மீண்டும் ஸ்மால் ஹவுஸ் வீட்டிலேயே வைத்துள்ளார். கண்டெண்டுக்காக மாயா பிக்பாஸ் வீட்டினரை பகைத்துக் கொள்ளாமல் வேறு ஏதாவது ஜாலி டாஸ்க்குகள் செய்தால் அவர் அடுத்த முறை பிக்பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால் அவர் கோல் மூட்டும் வேலைகளை செய்யாமல் இருந்தால்தான் அதுவும் சாத்தியம்.
