Connect with us

அவதாருக்கு பிறகு அதை செஞ்சது லியோ படத்துலதான்!.. மாஸ் காட்டிய படக்குழு!..

leo light

Tamil Cinema News

அவதாருக்கு பிறகு அதை செஞ்சது லியோ படத்துலதான்!.. மாஸ் காட்டிய படக்குழு!..

Social Media Bar

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்திய திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. வழக்கமான விஜய் திரைப்படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகுமோ அந்த பட்ஜெட்டில் தான் லியோ திரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் லோகேஷ் கனகராஜன் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன மேலும் இந்த திரைப்படம் எல் சி யு என அழைக்கப்படும் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சிற்க்குள் வருகிறதா என்பதும் பலரது கேள்வியாக இருக்கிறது.

ஏனெனில் ஏற்கனவே lcu வில் கார்த்தி நடித்த கைதியும் கமல் நடித்த விக்ரமும் இருக்கிறது. இதோடு தளபதி விஜயின் திரைப்படமும் இணைந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது ரசிகர்களின் ஆவலாக இருந்தாலும் இப்போது லியோ படம் எல் சி யுவில் வருமா என்பதை தெளிவாக இயக்குனர் கூறவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு லியோ திரைப்படத்தின் பிரமோஷனனுக்காக ட்ரோன்களில் இருக்கும் லைட்டுகளை பயன்படுத்தி லியோ படத்தின் பெயர் அதில் உள்ள இயக்குனர் இசையமைப்பாளர்கள் போன்றவர்களின் பெயர்களும் கட்சியாக காட்டப்பட்டன.

இதற்கு முன்பு அவதார் திரைப்படத்தை இதே போல ட்ரோன் கொண்டு சில மாயவேலைகளை காட்டினார்கள். அதேபோல தற்சமயம் லியோ திரைப்படத்திற்கும் செய்துள்ளனர் தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக இப்படி ட்ரோன் கொண்டு படத்திற்கு ப்ரமோஷன் செய்வது லியோ திரைப்படத்திற்கு தான்.

To Top