Connect with us

2 லட்சம் கொடுத்துட்டு எடுத்துக்க!.. ரஜினி படத்தால் கோடி ரூபாய் வசூல் செய்த படத்தை இழந்த இயக்குனர்!.

rv udhayakumar rajinikanth

Cinema History

2 லட்சம் கொடுத்துட்டு எடுத்துக்க!.. ரஜினி படத்தால் கோடி ரூபாய் வசூல் செய்த படத்தை இழந்த இயக்குனர்!.

Social Media Bar

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 70 வயதை தாண்டிய பிறகும் கூட இன்னமும் மார்க்கெட் குறையாமல் இளம் நடிகர்களுக்கு போட்டியாக வந்து நிற்கிறார் ரஜினிகாந்த்.

தற்சமயம் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தோல்வி படம் என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கும். அப்படியான ரஜினிகாந்தின் ஒரு தோல்வி படம் ஒரு இயக்குனருக்கு பெரும் சம்பவத்தை செய்திருக்கிறது.

தமிழில் பிரபலமான இயக்குனரான ஆர்.வி உதயக்குமாருக்கு அப்போது திரைப்படம் விநியோகம் செய்வதன் மீது ஆர்வம் ஏற்பட்டு வந்தது. அந்த சமயத்தில் இயக்குனர் ராம நாராயணன் நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தனக்கு தெரிந்த நபர்களுக்கு அவற்றை பரிந்துரை செய்து வந்தார்.

rajinikanth
rajinikanth

இந்த நிலையில் ரஜினிகாந்த் படத்தை விநியோகம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்த ஆர்.வி உதயக்குமார் முதல் படமாக தர்மத்தின் தலைவன் திரைப்படத்தை வாங்கியுள்ளார். ஆனால் அப்போது தயாரிப்பாளார்கள் தரப்பில் ஏதோ பிரச்சனை இருந்த காரணத்தினால் அந்த திரைப்படம் வெளியாவதில் பிரச்சனை ஆனது.

இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி கொண்டார் ஆர்.வி உதயக்குமார். இந்த நிலையில் அவரது நிலையை புரிந்துக்கொண்ட ராம நாராயணன், ராமராஜனின் படம் ஒன்னு இருக்கு, விநியோக தொகை 7 லட்சம் தான் நீ முதல்ல 2 லட்சம் மட்டும் கொடுத்து படத்தை எடுத்துக்க என கூறியுள்ளார்.

ஆனால் ரஜினி படத்தை வாங்கிவிட்டு பிறகு ராமராஜன் படத்தை வாங்குவது சரியாக இருக்காது என நினைத்த ஆர்.வி உதயக்குமார் அதை மறுத்துவிட்டார். இந்த நிலையில் வெளியான ராம ராஜன் திரைப்படம் ஒரு கோடி ரூபாயை தாண்டி ஹிட் கொடுத்தது, கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கரகாட்டக்காரன் திரைப்படம்தான் அது.

To Top