Cinema History
மணி என்னாகுதுனு தெரியுமா… தேவாவை மிரட்டிய ட்ரைவர்!.. எப்புடி வந்து சிக்கிருக்கேன் பாரு…
தமிழ் சினிமா ரசிகர்களால் தேனிசை தென்றல் என்ற அடை மொழியில் அழைக்கப்படுபவர் தேவா. கிராமிய இசையை சினிமாவிற்குள் கொண்டு வந்து அதற்கு நல்ல அங்கீகாரத்தையும் பெற்று தந்தவர் தேவா. தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
தேவா முதன் முதலாக கார் வாங்கியப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். முதன் முறையாக பழைய கார் ஒன்றை தேவா வாங்கினார். அவருக்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தினால் ஒருவரை அதற்கு ட்ரைவராக வைத்தார்.
அந்த ட்ரைவர் நல்ல உயரமான ஆள். முதல் நாள் காரில் செல்ல கிளம்பியப்ப்போது ட்ரைவர் மிகவும் கோபமாக இருந்தார். அவர் தேவாவிடம் வந்து மணி 7 ஆகுது. நேத்து நாம் 7 மணிக்கு அங்க இருக்கணும்னு சொன்னாங்க. நீங்க இப்பதான் இங்கயே கிளம்புறீங்க. இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது சார் என கூறியுள்ளார். அதை கேட்டு தேவாவே அதிர்ச்சியாகியுள்ளார்.
அதன் பிறகு காரில் செல்லும்போது தேவா அவர் இசையமைத்த பாடல் எப்படி இருக்கிறது என்று கேட்டுக்கொண்டு வருவாராம். ஆனால் அவரது ஓட்டுநர் பாதியிலேயே பாட்டை நிறுத்திவிடுவாராம் ஏன்பா நிறுத்துனே என கேட்டால் சார் இப்ப மூட் சரியில்ல சார் என கூறுவாராம். அப்படி ஒரு ஓட்டுநரையும் பல வருடங்கள் வேலைக்கு வைத்திருந்தாராம் தேவா.
