சிவாஜி கணேசனை மதியம் வரை காக்க வைத்த சரோஜாதேவி!.. கடைசி வரை எடுக்கப்படாத படப்பிடிப்பு.. அடக்கொடுமையே!..

Sivaji Ganesan : எவ்வளவோ காரணங்களால் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் நின்று போன கதைகளை கேட்டிருப்போம். ஆனால் கதாநாயகி வராததால் ஒரு திரைப்படம் கடைசி வரை வெளியாகாமல் போன சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் சிவாஜி கணேசன் திரைப்படத்திலேயே அப்படி ஒரு சோகம் நடந்திருக்கிறது.

அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் கே.சோமு அவரை பொருத்தவரை அவர் கொஞ்சம் கோபமான மனிதர் என்றாலும் திரைப்படம் இயக்குவதில் சிறப்பான திறன் கொண்டவர். எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் சிவாஜி கணேசனை வைத்து அவர் இயக்கிய திரைப்படம்தான் ஜீவ பூமி.

ஜீவ பூமி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது முதலே அதில் மிகவும் கடினமாக வேலை பார்த்து வந்தார் இயக்குனர் கே.சோமு. இப்படி இருக்கும் பொழுது ஒரு நாள் முக்கியமான படப்பிடிப்பிற்காக அதிகாலையிலேயே படப்பிடிப்பு துவங்கப்பட இருந்தது.

sivaji-ganesan
sivaji-ganesan
Social Media Bar

பொதுவாகவே படப்பிடிப்பை பொறுத்தவரை சிவாஜி கணேசன் படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே வந்து விடுவார். அன்றும் அதே போலவே வந்து விட்டார். காலை 7 மணிக்கு எல்லாம் சிவாஜி கணேசன் வந்துவிட ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு துவங்க இருந்தது.

ஆனால் சரோஜாதேவி மட்டும் ஒன்பது மணி ஆகியும் வரவே இல்லை சரி காத்திருப்போம் என்று மொத்த குழுவும் காத்திருந்தது. ஏனெனில் அன்று எடுக்கப்பட இருந்த பட காட்சிக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் கொஞ்சம் அதிகம் என்பதால் அந்த காட்சியை அன்றே எடுக்க வேண்டிய சூழல் இருந்தது.

ஆனால் மதியம் ஒரு மணி ஆகியும் சரோஜாதேவி வரவே இல்லை இருந்தாலும் சிவாஜி கணேசன் அப்பொழுதும் காத்துக் கொண்டிருந்தார் ஆனால் இதனால் கடுப்பான இயக்குனர் கே சோமு படபிடிப்பை நிறுத்திவிட்டு கிளம்பி சென்று விட்டார். அதன் பிறகு அந்த திரைப்படம் திரும்ப எடுக்கப்படவில்லை சரோஜாதேவி வராததால் அந்த திரைப்படம் பாதியிலேயே தடைப்பட்டு போனது.