Connect with us

அரசியலால் வந்த வினை.. குழந்தை வயித்தில் இருக்கும்போதே? நடிகை ரோஜா வாழ்க்கையில் நடந்த கொடுமை

Tamil Cinema News

அரசியலால் வந்த வினை.. குழந்தை வயித்தில் இருக்கும்போதே? நடிகை ரோஜா வாழ்க்கையில் நடந்த கொடுமை

Social Media Bar

தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ரோஜா. பெரும்பாலும் நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களுடன்  கூட்டணி போட்டு நடித்திருக்கிறார். அவருக்கும் இயக்குனர் ஆர்.கே செல்வமணிக்கும் இடையே காதல் உண்டானது.

ஆர்.கே செல்வமணி செம்பருத்தி என்ற திரைப்படத்தை இயக்கியப்போது அவருக்கும் ரோஜாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் அதற்கு பிறகும் கூட திரைப்படங்களில் நடித்து வந்தார் ரோஜா.

ஒரு கட்டத்திற்கு பிறகு அரசியலில் ஆர்வம் கொண்ட ரோஜா சினிமாவில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவருக்கு நடந்த சோகம் ஒன்றை பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது நான் 5 மாத கர்ப்பமாக இருக்கும்போது அரசியலில் ஒரு போராட்டத்திற்கு செல்ல வேண்டி இருந்தது.

அப்போது போராட்டத்திற்காக தார் ரோட்டில் அமர வேண்டி இருந்தது. சாலையில் உள்ள வெப்பத்தால் அப்போது கருவில் பிரச்சனை ஏற்பட்டு எனக்கு இரத்தம் வர துவங்கியது. உடனே என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

2 மாதக்காலம் படுத்த படுக்கையாக இருந்தேன். குழந்தை எப்போது வேண்டுமானாலும் அபாஷன் ஆகிவிடும் என்கிற நிலை இருந்தது. அவ்வளவு கஷ்டப்பட்டு 7 மாதத்தில் குறை பிரசவத்தில் எனது மகனை பெற்றெடுத்தேன் என கூறியுள்ளார் நடிகை ரோஜா.

To Top