கடைசி படம்னு பில்டப் கொடுத்துட்டு இப்படி சிக்கிக்கிட்டீங்களே அண்ணே.. முக்கிய விஷயத்தை மறந்த நடிகர்…

எவ்வளவு பெரிய டாப் ஹீரோவாக இருந்தாலும் கூட தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியை கண்டு வந்தால் அதற்கு பிறகு சினிமாவில் அவர்கள் பிரபலமாவது என்பது கடினம் தான் என்று கூற வேண்டும்.

அந்த வகையில் தன்னுடைய திரைப்படம் தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காக பயன்படுத்தி மண்ணை கவ்வி இருக்கிறார். இந்த நடிகர் டாப் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றி தான் என்கிற நிலை இருந்து வருகிறது.

gossip
gossip
Social Media Bar

ஆனால் சமீபத்தில் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து அவரது மார்க்கெட் கொஞ்சம் குறைய தொடங்கியதாகவும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. சம்பள விவகாரத்திலும் கொஞ்சம் அவரது சம்பளத்தை குறைத்து விட்டால் என்ன என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

கதாநாயகனின் திட்டம்:

இதற்கு நடுவே திரைப்படங்களுக்கு பிறகு ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார் இந்த கதாநாயகன். எனவே அடுத்து அவர் நடிக்கும் திரைப்படம் மட்டும் வெற்றி பெறவில்லை என்றால் அது சினிமா துறையில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு ஒரு வித்தையை கையாண்டார்.

அதாவது அடுத்து அவர் நடிக்கும் திரைப்படம்தான் அவரின் கடைசி திரைப்படம் என்று அறிவித்தார் அந்த நடிகர் அதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டது. கடைசி படம் என்னும் பொழுது கண்டிப்பாக அந்த திரைப்படத்தை பெரிதாக கொண்டாட வேண்டும் என்பது அவர்களது திட்டமாக இருந்தது.

புது பிரச்சனை:

ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகரின் எதிர்கால திட்டத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. இதற்கு நடுவே அடுத்து நடிகர் நடிக்கவிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் நடிகரின் இந்த திட்டங்கள் எதுவும் தெரியாமல் வெளிப்படையாக அடுத்து ஹீரோ எங்களது திரைப்படத்தில்தான் நடிக்க போகிறார் என்று அறிவித்துவிட்டனர்.

இப்பொழுதுதான் இந்த படம் தன்னுடைய கடைசி படம் என்று ஹீரோ கூறினார் அடுத்த படத்திற்கான அறிவிப்பு அதற்குள்ளாக வருகிறது என்று ரசிகர்கள் கடுப்பாகி இருக்கின்றனர். இவ்வளவு வேலைகளை செய்துவிட்டு கடைசியில் இருந்த ஒரு விஷயத்தை மறந்து விட்டோமே என்று இது குறித்து கவலையில் இருக்கிறாராம் அந்த நடிகர். கன்னட சினிமாவில் தற்சமயம் இந்த விஷயம் தான் பேசு பொருளாக இருந்து வருகிறது.