News
இனிமே நைட் ஷூட்டே வேண்டாம் சாமி!.. காரை துரத்தி வந்த பேய்!.. பிக்பாஸ் அர்ச்சனாவிற்கு நடந்த திகில் சம்பவம்!.
VJ Archana: வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளை விட தற்சமயம் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் மற்றும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அவர்கள் நடிக்கும் நடிப்பு திறமை தான்.
சமீப காலங்களாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளை விட சீரியலில் நடிக்கும் வில்லன், வில்லி கேரக்டர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறது. மேலும் கதாநாயகன், கதாநாயகிகளை ரசிக்கும் அளவிற்கு தற்பொழுது வில்லி கதாபாத்திரங்களையும் மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏனென்றால் அவர்களின் நடிப்பு மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கிறது.
அந்த வகையில் தமிழில் பல சீரியல்களில் வில்லியாக நடித்த பல நடிகைகள் பிரபலமடைந்து இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜா ராணி 2 என்ற சீரியல் மூலம் பிரபலமான விஜே அர்ச்சனா, அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வின்னர் ஆனார்.
தற்பொழுது அவர் பகிர்ந்திருக்கும் ஒரு திகில் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
நடிகை விஜே அர்ச்சனா
விஜேவாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய அர்ச்சனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் பிரபலமானார்.
அதில் அவர் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் மக்கள் மத்தியில் அவரின் கதாபாத்திரம் ரசிக்கப்பட்டது. இதனால் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் சீரியலில் நடிக்கும் போது உருவானது.

இந்நிலையில் அவர் பிக் பாஸ் சீசன் 7 Wild Card என்ட்ரியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் அவர் இறுதிவரை சென்று டைட்டில் வின்னரும் ஆனார். இந்நிகழ்ச்சியின் மூலம் விஜே அர்ச்சனாவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் அமைந்தார்கள்.
விஜே அர்ச்சனா பகிர்ந்து கொண்ட திகில் சம்பவம்
விஜே அர்ச்சனா பிரபல சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், தான் இரவு ஷூட்டிங் முடித்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டு நடுராத்திரி 2 மணி அளவில் வீட்டிற்கு சென்றேன். அப்பொழுது நான் ரோட்டில் காரை ஓட்டிக்கொண்டு போகும் போது ஒரு நபர் தனியாக சாலை ஓரத்தில் நின்றதை நான் பார்த்தேன்.
அப்போது இந்நேரத்திற்கு இவர் இங்கு என்ன செய்கிறார் என நினைத்தபடியே காரை ஓட்டிக்கொண்டு அவரைக் கடந்து சென்று விட்டேன். ஆனால் நான் காரை ஓட்டிக் கொண்டு இருக்கும் போது அந்த நபர் என் காரின் கதவு அறையில் இருப்பது போல நான் பார்த்தேன்.
உடனே நான் பயந்து போய் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்து, எங்கேயும் நிறுத்தாமல் வீட்டில் சென்று நிறுத்தினேன். நான் என் வீட்டில் உள்ள என் பெற்றோரிடம் நான் பேயை பார்த்து விட்டேன். நான் இனிமேல் இரவு ஷூட்டிங் செல்ல மாட்டேன் என அழுதேன்.
ஆனால் அவர்கள் நீ இரவு தூக்கம் இல்லாமல் இருப்பதால் இவ்வாறு உனக்கு தோன்றியிருக்கும். பேய் எல்லாம் ஒன்றுமில்லை என அவர்கள் கூறினார்கள். அந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் மறக்க முடியாது என விஜே அர்ச்சனா தெரிவித்து இருக்கிறார்.
