Gossips
முறை பையனோடு அலங்கோலமாக இருந்த நடிகை.. துக்கத்தில் இருக்கும் கணவர்!.. அடுத்த டைவர்ஸ் தயார்!.
சினிமா என்றாலே வதந்திகளும், கிசுகிசுகளும், சர்ச்சைகளும் இணையதளங்களில் வலம் வந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமா நடிகர், நடிகைகளை பற்றியும் அவர்கள் திருமணத்தை பற்றியும் சில கிசுகிசு வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் தற்பொழுது கோலிவுட்டில் ஒரு புதிய கிசுகிசு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பிரபல நடிகையாக இருந்த ஒருவர் சினிமாவை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார்.
தற்பொழுது அந்த நடிகையின் வாழ்க்கை பல சண்டை, சச்சரவுகளுக்கு இடையே நகர்ந்து கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
யார் அந்த நடிகை
தமிழ் சினிமாவில் முதலில் ஒரு பெயரின் மூலம் அறிமுகமாகி அந்த பெயர் ராசி இல்லாத காரணத்தால் வேறு ஒரு பெயரை மாற்றி தமிழ் சினிமாவில் பயணிக்க தொடங்கினார். மேலும் பெயர் மாற்றிய நேரம் அவருக்கு பட வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து கொண்டிருந்தன. ஆனால் அவர் எதிர்பார்த்த நிலையை அடைய முடியவில்லை.
மேலும் அந்த நேரத்தில் சர்ச்சை இயக்குனரின் படத்தில் நடிக்க அந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் அந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது.

அடுத்ததாக அவர் மற்றொரு சர்ச்சை இயக்குனரின் படத்தில் நடித்தார். அந்த படம் சற்று விவகாரமான உறவு முறையை கொண்ட கதைக்களமாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த நடிகை தன்னுடைய சிறப்பான நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும் அந்த படத்தில் கொஞ்சம் கிளாமராகவே நடித்திருந்தார். ஆனால் அவர் சினிமாவில் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை.
திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை
இவ்வாறு சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என அந்த நடிகை நினைத்திருந்த நேரம் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து, சினிமாவை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்தது. ஆனால் காலங்கள் செல்ல செல்ல கணவன் மனைவி இருவர்களுக்கிடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டிருக்கிறது.
இதற்குக் காரணம் அந்த நடிகை என்று கூறப்பட்டு வருகிறது. அந்த நடிகை அடிக்கடி பார்ட்டிகளுக்கு செல்பவர் என்றும், ஒருமுறை கணவர், மனைவி மற்றும் அவரின் உறவினர் ஒருவருடன் பார்ட்டிக்கு சென்று உள்ளார்கள். பார்ட்டியில் மூவரும் போதையில் வீடு திரும்பி உள்ளனர்.

அன்று முதல் அந்த உறவினருடன் நடிகைக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதுதான் தற்பொழுது கணவன் மனைவி இருவருக்கிடையே சண்டை வருவதற்கான காரணமாக அமைந்திருக்கிறது.
மேலும் ஒரு முறை அந்த நடிகையும், உறவினரும் பார்ட்டி வரை சென்று இருக்கிறார்கள். வழக்கம்போல பார்ட்டி முடிந்து மதுபோதையில் இருவரும் வீடு திரும்பிய நிலையில், மனைவியும் அவரது உறவினரும் ஒன்றாக இருந்ததை பார்த்த அந்த நடிகையின் கணவர் அதிர்ச்சிடைந்துள்ளார். மேலும் அந்த நடிகை இதனை எல்லாம் மறந்துவிடும் படியாக கூறியுள்ளார். ஆனால் அதனை மறக்க முடியாமல் தற்பொழுது நடிகைக்கு விவாகரத்து கொடுக்கப் போவதாக நடிகையின் கணவர் முடிவு செய்திருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
