News
முதலில் கோட் படத்துக்கு வைச்ச டைட்டில்.. சர்ச்சையாகும்னு அப்புறம் விட்டுட்டோம்.!
விஜய் தற்போது நடித்து ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் கோட். இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ள நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அஜித் ரசிகர்களும் தற்போது இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் இறுதியாக இரண்டு படங்களில் நடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப் போகிறார் என்பதால் அவரின் நடிப்பில் வெளியாகும் இரண்டு படங்களை கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது கோட் படத்தின் டைட்டில் பற்றி இயக்குநர் கூறியிருக்கும் இருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோட் திரைப்படம்
நடிகர் விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, அஜ்மல், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார்.

தற்போது இந்த படத்தின் பிரமோஷனில் வெங்கட் பிரபு அளித்துள்ள பேட்டியில் இந்த படத்தின் டைட்டில் குறித்து பகிர்ந்து கொண்ட சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோட் படத்தின் டைட்டில் பற்றி வெளிவந்த தகவல்
படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு கதாபாத்திரத்தில் காந்தி என்று அவர் நடிப்பது போன்ற காட்சி டிரைலரில் இடம் பெற்று இருந்தது. இந்நிலையில் படத்திற்கு முதலில் காந்தி என்று தான் டைட்டில் வைக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த தலைப்பு கிடைக்காது என்பதால், சிறந்த தலைவரை குறிக்கும் வகையில் கோட் என வைத்ததாக வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

தற்போது இந்த தலைப்பு அனைவரின் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் டிரைலரில் காந்தி வசனங்கள் இடம் பெற்று அனைவருக்கும் எதிர்பார்ப்பை தூண்டியது. எனினும் பத்திரிகையாளர்கள் இது குறித்து வெங்கட் பிரபுவுடன் கேட்கும் போதும் கூட, அவர் அவரின் நண்பர் காந்தி பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
