Connect with us

மாணவர்களுக்கு கவர்ச்சி காட்டியதால் வந்த பிரச்சனை… பதில் கொடுத்த நடிகை அமலாபால்

amala

News

மாணவர்களுக்கு கவர்ச்சி காட்டியதால் வந்த பிரச்சனை… பதில் கொடுத்த நடிகை அமலாபால்

Social Media Bar

Amala Paul: பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் அமலாபால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் நடித்து வரும் அமலாபாலை பற்றிய சர்ச்சை ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமலா பால்

தன்னுடைய திரையுலக வாழ்க்கையை மலையாள திரைப்படமான நீலத்தாமரா என்ற படத்தில் ஒரு சிறிய துணை கதாபாத்திரத்தில் தொடங்கினார்.

அதன் பிறகு தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு அவர் தமிழில் தெய்வமகள், முப்பொழுதும் உன் கற்பனைகள், நாயக், ரன் பேபி ரன், விஐபி, பசங்க 2 ராட்சசன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெளியான தலைவா என்ற படத்தில் நடித்தன் மூலம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார். மேலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிமிர்ந்து நில் என்ற படத்தில் நடித்திருந்தார்.

amala

பிறகு இயக்குனர் ஏ. எல். விஜய் உடன் காதலில் இருந்தார். பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு அமலா பால் சினிமாவில் நடிப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டதால், 2017 ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

சர்ச்சையில் அமலா பால்

தற்போது இரண்டாவதாக திருமணமாகி குழந்தை பெற்றுள்ள அமலாபால் அவரின் நடிப்பில் உருவாகியுள்ள லெவல் கிராஸ் திரைப்படம் இன்று வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக பட குழு கொச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமலாபால் கவர்ச்சியான உடையில் வந்தார் என்றும் அவர் மீது தற்பொழுது சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. ஆனால் இதற்கு பதில் அளித்த அமலா பால் என்னுடைய உடை கவர்ச்சியாக இல்லை என்றும், என்னுடைய உடையை கேமராக்கள் காட்சிப்படுத்திய விதம் தான் கவர்ச்சியாக இருக்கிறது எனவும், மேலும் நான் எனக்கு வசதியான ஆடையை தான் அணிந்தேன் எனவும் கூறி இருக்கிறார்.

என்னுடைய உடையில் மாணவர்களின் மத்தியில் எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை என அமலா பால் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

To Top