Connect with us

60 வருடங்களாக வரும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள்! –  அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? அறிவித்த படக்குழு!

Hollywood Cinema news

60 வருடங்களாக வரும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள்! –  அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? அறிவித்த படக்குழு!

Social Media Bar

1962 ஆம் ஆண்டு துவங்கி இப்போது வரை பிரபலமாக இருக்கும் ஒரு கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். 1962 இல் தான் முதல் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான டாக்டர் நோ வெளியானது.

அதை தொடர்ந்து இதுவரை 27 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் 60 வருடங்களாக வந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு 15 வருடத்திற்கு ஒரு முறையும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் நபரை மாற்றுவது ஹாலிவுட்டில் வழக்கமாக நடந்து வரும் நிகழ்வாகும்.

அந்த வகையில் இதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு டேனியல் க்ரிக் என்பவர் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க துவங்கினார். கேசினோ ராயல் என்கிற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் மூலம் இவர் அறிமுகமானார். அதை தொடர்ந்து குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர் இறுதியாக 2021 ஆம் ஆண்டு நோ டைம் டூ டை திரைப்படமும் வந்தது.

ஜேம்ஸ் பாண்டாக நடித்தவர்களில் டேனியல் க்ரிக் புகழ்பெற்றவராக இருந்ததால் நோ டை டூ டை திரைப்படத்தை அவருக்கு சிறப்பான படமாக எடுத்தனர். இதையடுத்து 15 வருடம் முடிந்த நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்டை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் படக்குழு உள்ளது.

இந்நிலையில் தற்சமயம் நெட்ப்ளிக்ஸில் எமிலி இன் பேரிஸ் (Emily in paris) என்னும் சீரிஸில் நடித்த லூசியன் லாவிஸ்கவுண்ட்டை (Lucien Laviscount) அடுத்த ஜேம்ஸ் பாண்டாக முடிவு செய்துள்ளனர். அடுத்த 15 வருடத்திற்கு இவர்தான் ஜேம்ஸ் பாண்டாக இருப்பார் என கூறப்படுகிறது.

Bigg Boss Update

To Top