வட சென்னை, காலா திரைப்படங்களை காபி அடிக்கிறதா? –எஸ்.கேவின் மாவீரன் கதை என்ன?

 தற்சமயம் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கு முன்னர் இவர் நடித்த படங்களில் டான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தன அதிலும் டான் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது.

Social Media Bar

 ஆனால் இறுதியாக வந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வசூலை தரவில்லை இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மடோனே அஸ்வின் இயக்குகிறார். 

காலா வடசென்னை திரைப்படங்களைப் போல மாவீரன் திரைப்படமும் நில அரசியல் சார்ந்த பிரச்சினைகளை பேசக்கூடிய திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.  வட சென்னை மற்றும் காலா திரைப்படங்களில் அவர்களது நிலத்தை பறிக்க நினைக்கும் எதிரிகள்,  அவர்களிடமிருந்து நிலத்தை மீட்க போராடும் கதாநாயகன் என்பதாக கதை இருக்கும்.

 அதே கதை அம்சத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படம் அமைந்திருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. கடற்கரை ஓரத்தில் சிவகார்த்திகேயன் வசிக்கும் பகுதியை ஆக்கிரமிக்க நினைக்கும் அரசியல்வாதியாக மிஷ்கின் நடித்துள்ளார். 

மிஸ்கினிடமிருந்து தன் நிலத்தை கதாநாயகன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே படத்தின் கதை என கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே தமிழ் சினிமாவில்  பலமுறை வந்த கதையை மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?  என்கிற கேள்வி மக்கள் மத்தியில் வந்துள்ளது .