Cinema History
கமல்ஹாசனை வைத்து நான் எடுத்த அந்த மொக்கைபடம்!.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் ஸ்ரீதர்!..
Kamalhaasan and Director Sridhar : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களிலேயே சிறப்பான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ஸ்ரீதர். அப்பொழுதெல்லாம் மக்கள் படத்தின் இசையமைப்பாளர் யார், இயக்குனர் யார், என்பதெல்லாம் பெரிதாக அறிந்து வைத்திருக்க மாட்டார்கள்.
இருந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் கவிஞர்கள் பெயர் மttumம் மக்களுக்கு தெரியும். அதுவும் மிகப் பிரபலமாக இருந்தால் மட்டுமே தெரியும் அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக தெரிந்த ஒரு இயக்குனராக இருந்தவர் ஸ்ரீதர்.
இப்போதைய தலைமுறையினருக்கு கூட அவர் இயக்கிய காதலிக்க நேரமில்லை திரைப்படம் பிடிக்கிறது என்றால் அவர் எப்படிப்பட்ட இயக்குனராக இருந்திருப்பார். ஆனால் அப்படிப்பட்ட ஸ்ரீதர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது எனக்கே பிடிக்காமல் நான் இயக்கிய திரைப்படம் என்னுடைய சினிமா வரலாற்றில் உண்டு என்று கூறியிருக்கிறார்.
அதை என்ன படம் என்று அவர் கூறும் பொழுது அது கமல்ஹாசன் படம் என்று கூறியிருப்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. ஏனெனில் அதே சமகாலத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் கமல்ஹாசன்.
அவரை வைத்து 1986 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கி வெளியான திரைப்படம் நானும் ஒரு தொழிலாளி. இந்த திரைப்படத்தை தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று பேட்டியில் கூறுகிறார் ஸ்ரீதர். வேண்டா வெறுப்பாகத்தான் இந்த படத்தை எடுத்தேன். ஏனெனில் அப்பொழுது தொழில் சம்பந்தமாக எனக்கு கொஞ்சம் பிரச்சனைகள் இருந்ததால் படத்தில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.
எனவே அந்தப் படத்தை நான் ஒழுங்காகவே இயக்கவில்லை. வெளியான பிறகு அந்த படமும் நல்ல வெற்றியை காணவில்லை அப்போதுதான் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன் சினிமா எடுக்கிறோம் என்றால் நமது முழு ஈடுபாடும் அந்த படத்தின் மீது தான் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார் ஸ்ரீதர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்