தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள பல பிரபலங்களின் பின்னணி கதை பலருக்கும் தெரியாத விஷயமாகும். தங்களது வாழ்க்கையில் பல வகையான துன்பங்களை அவர்கள் அனுபவித்து வந்தாலும் ஆக்ஷன் என்கிற ஒரு வார்த்தையை கேட்டப்பிறகு மொத்தமாக தங்கள் சொந்த வாழ்க்கையை விட்டுவிட்டு சினிமாவிற்குள் நடிகராக மாறி இருப்பார்கள்.
அப்படி வாழ்க்கையில் பல வித துன்பங்களை சந்தித்ததவர்தான் நடிகை சாந்தி. மிக இளமையாக இருக்கும்போதே இவர் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில் வந்தார். சினிமாவில் நடிக்க துவங்கும்போது நடிகைகள் இந்த காதல் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

ஏனெனில் காதல் விவகாரங்கள் அவர்களது சினிமா வாழ்க்கையிலேயே பிரச்சனையை ஏற்ப்படுத்திவிடும். அப்படியான நிகழ்வுதான் சாந்தியின் வாழ்க்கையிலும் நடந்தது. சாந்தி 16 வயதில் நடித்துக்கொண்டிருந்தப்போது அவரது திரைப்படத்தில் வில்லியம்ஸ் என்பவர் கேமிரா மேனாக பணிப்புரிந்தார்.
கமலுடன் வந்த பிரச்சனை:
அவருக்கு ஒரு 40 வயதிருக்கும். ஆனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை. சாந்தியை பார்த்தவுடனே அவருக்கு பிடித்துவிட்டது. இதனையடுத்து சாந்தியிடம் சென்ற வில்லியம்ஸ் உன்னை நான் காதலிக்கிறேன். என்னை நீ திருமணம் செய்துக்கொள்ள வில்லை என்றால் இறந்துவிடுவேன் என கூறிவிட்டார்.

இதனை கேட்டதும் சாந்திக்கு பயம் வந்துவிட்டது. நிஜமாகவே தற்கொலை செய்துக்கொள்வாரோ என பயந்து அவரை திருமணம் செய்துக்கொண்டார் சாந்தி. அதற்கு பிறகுதான் வில்லியம்ஸிற்கு சினிமா துறையில் அவ்வளவு நல்ல பெயர் கிடையாது என்பது சாந்திக்கு தெரிந்தது.
மேலும் திருமணத்திற்கு முன்பு வில்லியம்ஸிற்கும் கமல்ஹாசனுக்கும் இடையே பிரச்சனை ஆகியுள்ளது. அப்போது வில்லியம்ஸ் கமல்ஹாசனை அடிக்க சென்றுள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு அவர் சாந்தியை கொடுமைகள் படுத்தியுள்ளார்.
பிறகு வில்லியம்ஸ் இறந்தப்பிறகு திரைத்துறையில் மெகா சீரியல்களில் எல்லாம் நடித்து சொந்த காலில் முன்னேறியிருக்கிறார் சாந்தி.






