News
அஜித் வாய்ப்பில் மண்ணை போட்ட பிரசாந்த்… அருமையான வாய்ப்பை தட்டி தூக்கிய சம்பவம்!.
தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித். இவரை அவரின் ரசிகர்கள் தல என்றுதான் அன்போடு அழைப்பார்கள்.
அவர் சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் இருந்து பல கஷ்டங்களை தாண்டி சினிமாவில் சாதித்திருக்கிறார். மெக்கானிக்காக இருந்த அஜித் விளம்பரம் அதன் பிறகு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
ஒரு படத்தின் வெற்றிக்காக முழு கடின உழைப்பையும் கொடுக்கும் அஜித் பல படங்கள் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். அந்த வகையில் அவர் முன்னதாக நடிக்க இருந்த படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்து பிரசாந்தின் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்திருந்ததை பற்றி பிரபல பத்திரிகையாளர் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்
இவரின் இயக்கம் எப்பொழுதும் பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். அதனால் தான் இவரை அனைவரும் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கிறார்கள். இவர் பல வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். அதிலும் பல முன்னணி நடிகர்களுக்கும் இவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
அந்த வகையில் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜீன்ஸ். தற்பொழுது வரை இந்த திரைப்படம் அனைவருக்கும் ஃபேவரைட் திரைப்படமாக அமைந்திருக்கும்.

மேலும் இந்த படத்தில் வெளிவந்த அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படத்தில் உள்ள பாடல்கள் இன்றளவும் இளைஞர்களால் ரசிக்கக்கூடிய பாடலாக உள்ளது.
இந்த படம் நடிகர் பிரசாந்துக்கு இது மாபெரும் வெற்றி கொடுத்தது. ஆனால் இந்த படத்தில் முதலாவதாக நடிக்க இருந்த நடிகர் தற்பொழுது முன்னணி நடிகராக இருக்கும் அஜித். அவர் ஏன் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை பற்றி பிரபல பத்திரிகையாளர் வெங்கடேஷ் தெரிவித்து இருக்கிறார்.
அஜித்தின் வாய்ப்பை தட்டிப் பறித்த பிரசாந்த்
இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் பேட்டி ஒன்றில் கூறியபோது இந்த படம் உருவாகும்போது நான் சங்கர் சாருடன் இருந்தேன். இந்த கதையை அவர் அஜித் சாருக்காக தான் எழுதினார். ஆனால் இதனை தெரிந்து கொண்ட பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் தன்னுடைய மகன் பிரசாந்த் நடிக்க வைக்க சொல்லி சங்கர் சாரிடம் சொல்ல சொன்னார்.
நான் இது பற்றி சங்கர் சாரிடம் பேசும் பொழுது, இந்த படத்தை நான் அஜித்துக்காக தயார் செய்தேன். எனவே நான் இந்த படத்தில் அவரை தான் நடிக்க வைக்கப் போகிறேன் என அவர் கூறினார்.

ஆனால் பிரசாந்தின் தந்தை பிரசாந்துக்கு சம்பளமே வேண்டாம். இந்த படத்தில் அவர் நடித்தால் மட்டும் போதும் என கூறினார். மேலும் அப்படி இப்படி என்று சங்கர் சார் மனசை மாத்தி விட்டார். கடைசி வரைக்கும் ஜீன்ஸ் படத்தின் கதையை அஜித் சாரிடம் கூறவே இல்லை. பிரசாந்த் நடிக்க வில்லை என்றால், நிச்சயம் இந்த படத்தில் அஜித் சார் நடித்திருப்பார் என பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் அஜித் நடித்திருந்தால் அவரின் வாழ்க்கைக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கும். எனவே இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஜித்தின் பிழைப்பில் மண்ணை போட்டுவிட்டார் என கருத்து பதிவு செய்து வருகிறார்கள்.
