Cinema History
எம்.ஜி.ஆரை அந்த இயக்குனருக்கு பிடிக்காதாம்? – உண்மை கதை வேறு விதமா இருக்கு!
சிவாஜி, எம்.ஜி.ஆர் காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் இப்போது போலவே பல அரசியல்கள் இருந்து வந்தன.
சிவாஜிக்கும் எம்.ஜி ஆருக்கும் இடையே கடுமையான போட்டிகளும் நிலவி வந்தன. இந்த நிலையில் சிவாஜியை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பீம் சிங்.

ஆனால் அவர் எம்.ஜி.ஆரை வைத்து பெரிதாக படங்கள் இயக்கியதே கிடையாது. பீம் சிங் சிவாஜியின் மீது கொண்டுள்ள நட்பின் காரணமாக எம்.ஜி.ஆரை நிராகரிக்கிறார் என்று ஒரு செய்தி அப்போது பரவலாக சினி வட்டாரத்தில் இருந்து வந்தது.
ஆனால் உண்மையில் பீம்சிங் எம்.ஜி.ஆருக்கும் கூட நல்ல நண்பராகவே இருந்தார். ஆரம்பக்காலங்களில் எம்.ஜி.ஆர் ரத்தினகுமாரி என்கிற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு என்பவர் இயக்கினார். அப்போது அவருக்கு துணை இயக்குனராக இருந்தவர் பீம்சிங்.
அப்போது முதலே பீம்சிங்கும் எம்.ஜி.ஆரும் நண்பர்கள். சில காலங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு தனது கட்சியில் நெருக்கடிகள் கூடவே அவர் திரைப்படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் பீம்சிங் எம்.ஜி.ஆருக்காக கதை வைத்திருந்தார். அதில் எம்.ஜி.ஆருக்கு நடிக்க நேரமில்லாததால் அவர் பீம்சிங் படத்தில் நடிக்கவே இல்லை.
