தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது 68-ஆவது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் பலரும் விஜயை கேலி செய்த நிலையில் தற்போது பல கோடி ரசிகர்களின் தலைவனாக இருக்கிறார் விஜய்.
தன் தந்தையின் பின்புலத்தைக் கொண்டு சினிமா துறையில் நுழைந்தாலும், அவரின் தனித்துவமான நடிப்பின் மூலமும் நடனத்தின் மூலமும் ரசிகர்களை தன் வசப்படுத்தி தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக விஜய் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தன்னுடைய 68-வது படத்தில் நடித்து வரும் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கூறிய ஒரு தகவல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜயின் கோட் திரைப்படம்
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம் கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
மேலும் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் நடிப்பதாக சொல்லப்பட்டது.

விஜய் இறுதியாக நடித்து வெளிவந்த லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்து உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே எழுந்துள்ளது.
இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் விஜய் தன்னுடைய கடைசி படம் கோட் என்றும், கட்சி ஒன்றை தொடங்கி இருப்பதாகவும் எனவே அரசியலில் முழு நேரமாக ஈடுபட போவதாகவும் கூறியிருந்தார்.
வெங்கட் பிரபுவிடம் விஜய் கூறிய ரகசியம்
கோட் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் படப்பிடிப்பு முடிந்து படத்தின் முதல் பாதியை விஜய் பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவை பாராட்டியதாக செய்திகள் கசிந்துள்ளது.
இந்நிலையில் வெங்கட் பிரபு இரண்டாம் பாதி தொடர்பான பணிகளை செய்து வந்தார். தற்பொழுது விஜய் முழு படத்தையும் பார்த்துவிட்டு “கலக்கிட்ட அவசரப்பட்டு ரிட்டயர்மென்ட் அறிவிச்சிட்டேனே” இன்னும் ஒரு படம் உன் கூட்டணியில் நான் நடித்திருக்கலாம் என வெங்கட் பிரபுவிடம் விஜய் கூறியதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க கோட் படத்தின் அப்டேட் ஆக கடைசியாக வந்த மூன்றாவது பாடல் ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அந்த பாடலில் விஜயின் டீ ஏஜிங் பலராலும் ட்ரோலுக்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






