News
ஒரே பாடலை விஜய், ஜெயம் ரவி ரெண்டு பேருக்கும் போட்டு கொடுத்த பாடலாசிரியர்.. இப்படி ஏமாத்திட்டீங்களே!..
தமிழ் சினிமாவில் ஒரு சில பாடல்கள் தற்பொழுது வரை ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களாக பிளே லிஸ்டில் இருக்கும். அந்த வகையில் தற்பொழுது பிரபல முன்னணி நடிகரின் படத்திற்கு கொடுக்கப்பட்ட பாடல் அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்டு மற்றொரு ஹீரோவின் படத்தில் வைத்து அந்த பாடல் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது அது குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
இந்தத் திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ்ராஜ், விவேக் ஆகியோர் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
நதியா சினிமாவை விட்டு விலகி இருந்த நேரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்த திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது. இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்திற்கு யுக பாரதி பாடல் வரிகள் எழுத அந்த பாடல் இயக்குனர் மோகன் ராஜாவால் நிராகரிக்கப்பட்டது. தற்பொழுது அந்த பாடல் பிரபல முன்னணி நடிகரான விஜயின் படத்திற்கு அனுப்பப்பட்டு அந்த பாடல் மாபெரும் ஹிட்டானது.
விஜய் படத்தில் ஹிட்டான பாடல்
எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்திற்கு பாடல் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது மோகன் ராஜா படத்தின் கதையை சொல்கிறார். அப்பொழுது கண்டேன் கண்டேன் என்ற பாடலை யுகபாரதி எழுத, ஆனால் அந்த பாடல் வரிகள் வேறுவிதமாக வேண்டும் என கேட்கிறார்.

உடனே யுக பாரதி கண்டேன் கண்டேன் என்ற வரிகளை எடுத்துவிட்டு ஐயோ ஐயோ என வரிகளைப் போட்டு எழுதுகிறார். அந்தப் பாடல் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமியில் சூப்பர் ஹிட் ஆனது.
மேலும் அதே நாள் மாலை வித்யாசாகர் யுக பாரதியிடம் பாடல் பல்லவி ஏதாவது வைத்திருக்கிறாயா என கேட்கிறார். இவர் கண்டேன் கண்டேன் என்ற பாடலை கொடுக்கிறார். அந்த பாடல் தான் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் விஜயின் நடிப்பில் வெளிவந்த மதுர படத்தில் இடம் பெற்ற பாடல். கண்டேன் கண்டேன் பாடல் விஜய்க்கு வெற்றி பாடலாக அமைந்தது.
