Cinema History
கலகத்தில் உருவான நட்பு!- கே.எஸ் ரவிக்குமாரும், சரத்குமாரும் இப்படிதான் ப்ரெண்ட்ஸ் ஆனாங்க!..
தமிழ் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். கே.எஸ் ரவிக்குமாருக்கு முதன் முதலில் தமிழில் வாய்ப்புகளை அளித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரி.
கே.எஸ் ரவிக்குமார் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் புரியாத புதிர். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் முதலே இருவரும் நல்ல நண்பர்களாக ஆனார்கள். ஆனால் அவர்கள் நண்பர்கள் ஆவதற்கு ஒரு சண்டைதான் காரணமாக இருந்துள்ளது.
புரியாத புதிர் படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருந்தது. மாலை 6 மணிக்கு படப்பிடிப்பிற்கு வரும்படி கூறப்பட்டிருந்தது. ஆனால் சரத்குமார் வரவே இல்லை. சரி முதலில் டூப் காட்சிகளை படமாக்கிடலாம் என முடிவெடுத்த கே.எஸ் ரவிக்குமார் அந்த காட்சிகளை எல்லாம் படமாக்கினார். நேரம் இரவு 12 ஆகிவிட்டது. இன்னமும் சரத்குமாரை காணவில்லை.

இதனால் செம கடுப்பானார் கே.எஸ் ரவிக்குமார். படப்பிடிப்பு நடந்துக்கொண்டே இருந்தது இரவு 2 மணிக்கு வருகிறார் நடிகர் சரத்குமார். கோபமான கே.எஸ் ரவிக்குமார். நான் எல்லா காட்சிகளையும் டூப் வச்சே எடுத்துக்குறேன். அந்தாள போக சொல்லுங்கையா என கூறிவிட்டார்.
அதன் பிறகு இருவரையும் ஒரு வழியாக சமாதானப்படுத்தி படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு சரத்குமாரே தனது காரில் கே.எஸ் ரவிக்குமாரை அழைத்து சென்று அவரது வீட்டில் விட்டு விட்டு சென்றார். அதிலிருந்துதான் அவர்கள் இருவருக்கும் நட்பு உருவானது என கே.எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
