Cinema History
கதை சொல்லுறேன்னு என் பழைய வாழ்க்கையை நியாபகப்படுத்திட்டிங்க… குமுறி குமுறி அழுத எம்.ஜி.ஆர்!..
MG Ramachandran : தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் மிகவும் ஆழமாக சிந்திக்க கூடியவர்.
அந்த படத்தின் கதை பாடல் வரிகள் படத்தில் நடிப்பவர்கள் என அனைவருமே எம்.ஜி.ஆரின் இஷ்டத்திற்குதான் இருக்க வேண்டும். கதை மட்டும் அவருக்கு பிடித்திருந்தால் பாக்கி அனைத்து விஷயங்களையும் எம்.ஜி.ஆரே பார்த்துக் கொள்வார்.
இப்படி இருக்கும் பொழுது ஒரு கதை எம்.ஜி.ஆருக்கு நன்றாக இருக்குமே என்று யோசித்த எழுத்தாளர் கே.எஸ் பாலகிருஷ்ணன் ஒரு கதையை எம்.ஜி.ஆருக்காக கூறினார். பொதுவாக சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிக்கும் எம்.ஜி.ஆருக்கு ஒரு குடும்ப கதையை கூறினார் கே எஸ் பாலகிருஷ்ணன்.

அந்த கதையின்படி முதல் திருமணம் செய்யும் கதாநாயகனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை பிறந்தவுடன் அந்த தாய் இறந்து விடுகிறார். இந்த நிலையில் தனது முதல் மனைவியின் மீது எக்கச்சக்கமான அன்பில் இருக்கும் கதாநாயகன் அந்த முதல் மனைவியை மறக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என்று கே எஸ் பாலகிருஷ்ணன் கதையை கூறிக் கொண்டிருக்கும் பொழுதே எம்.ஜி.ஆர் அழத்துவங்கி விட்டார்.
பிறகு வேகமாக சென்று அவரது அறையின் கதவை சாத்திக் கொண்டார் ஏன் எம்.ஜி.ஆர் அழுகிறார் என்று அவர் சந்தேகத்துடன் பார்க்கும் பொழுது அருகில் இருந்தவர் எம்.ஜி.ஆரின் முதல் மனைவியை நீங்கள் நினைவுபடுத்தி விட்டீர்கள் அதனால் தான் அவர் அழுகிறார் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு வெளியில் வந்த எம் ஜி ஆரும் ஆமாம் எனக்கு எனது முதல் மனைவியின் நினைவு வந்துவிட்டது இந்த திரைப்படம் எனது வாழ்க்கையுடன் தொடர்புடைய திரைப்படமாக இருக்கிறது. எனவே இதில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர்.
ஆனால் அந்த திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றாலும் கூட எம்.ஜி.ஆர் நடிக்க மிகவும் ஆசைப்பட்ட அந்த திரைப்படம் கற்பகம் என்கிற பெயரில் பிறகு ஜெமினி கணேசன் நடித்த வெளியானது.
