News
எதுக்கு காரி துப்புறார்னே தெரியாது…!- கண்ணதாசன் குறித்து கூறிய இளையராஜா..!
தமிழ் சினிமாவில் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலத்தில் துவங்கி இப்போது வரை பெரும் இசையமைப்பாளராக இருந்து வருபவர் இளையராஜா.
இளையராஜா மிகப் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவர் இசையமைக்கும் திரைப்படங்கள் யாவும் பெரும் ஹிட் கொடுத்தன. இளையராஜா இசை அமைக்கிறார் என்பதற்காகவே அவரது திரைப்படங்களை பார்ப்பதற்காக ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது என கூறலாம்.
இளையராஜா சினிமாவிற்கு வந்த புதிதில் அவரது பாடல்களுக்கு கவிஞர் கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதி வந்தார். கண்ணதாசன் பெரிய பெரிய நட்சத்திரங்களையே பெரிதாக மதிக்க மாட்டார்.

யாராவது பாடலுக்கான சூழலை சொல்வதற்காக வந்தால் அந்த சமயத்தில் அவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார். ஒருவேளை அந்த சூழல் அவருக்கு பிடிக்கவில்லை எனில் உடனே கீழே துப்புவார் அவர் எதற்காக துப்பினார் என்பதை இசையமைப்பாளர்களால் கண்டறிய முடியாது.
இளையராஜா இசையமைத்த ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற பாடலுக்கான பாடல் வரிகளை எழுதுவதற்காக கண்ணதாசனை சந்திக்க சென்றார் இளையராஜா.
அப்போது பாடலுக்கான இசையை இளையராஜா இசை அமைத்து காட்டினார் உடனே கண்ணதாசன் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்று வரியை கூறினார். ”இசையை முடிக்கும் முன்னே என்ன வரியை கூறிவிட்டார், அதுவும் இந்த இசைக்கு தகுந்தாற்போல் தெரியவில்லையே” என்று யோசித்துள்ளார் இளையராஜா.
பிறகு பாடலாக அதை கொண்டு செல்லும் பொழுது அவர் அமைத்த இசைக்கு பொருத்தமாக அந்த பாடல் வரிகள் இருந்துள்ளன அந்த அளவிற்கு திறமை வாய்ந்தவராக கண்ணதாசன் இருந்துள்ளார். இந்த விஷயத்தை இளையராஜா ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
