சினிமாவில் சில பாடல்கள் உருவானதற்கு பின்பு சுவாரஸ்யமான கதை ஒன்று இருக்கும். அப்படியான கதைகள் பெரும்பாலும் வெளியில் தெரியாமல் இருக்கும்.
சிவக்குமார் படத்திலும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. நடிகர் சிவக்குமார் நடித்த ரோசாப்பு ரவிக்கைக்காரி திரைப்படம் அவருக்கு மிக முக்கியமான திரைப்படம் என கூறலாம். அதற்கு முன்பு நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரமாக அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்.

கிட்டத்தட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு எப்படி 16 வயதினிலே திரைப்படம் ஒரு திருப்புமுனையாக இருந்ததோ அதே போல ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் சிவக்குமாருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. அந்த படத்தில் மிகவும் பிரபலமான பாடலான உச்சி வகுந்தெடுத்து பாடல் உருவானதற்கு பின்னால் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கதைப்படி ஊரில் உள்ளவர்கள் தனது மனைவியின் நடத்தை சரியில்லை என்று கூறுவார்கள். அதனால் மனம் நொந்து சிவக்குமார் பாடுவதாக அந்த பாடல் அமைந்திருக்கும். அந்த நிகழ்வை புலமை பித்தனிடம் கூறியப்போது அவர் கிராமத்து ஒப்பாரி பாடல்களில் இருந்து இதற்கு வரிகளை எடுத்துள்ளார்.
வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க என்கிற வரிகள் எல்லாம் கிராமத்தில் பாடும் ஒப்பாரியில் இடம் பெறும் வரிகள்தானாம். அதனால்தான் அந்த பாடலுக்கு கிராம மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.