Tamil Cinema News
சிம்புவுக்காக எழுதுன சைக்கோ கதை.. நடிச்சிருந்தா மன்மதன் மாதிரி இருந்துருக்கும்..!
நடிகர் சிம்பு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தாலும் கூட இப்போது தொடர்ந்து நல்ல நல்ல கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அவர் நடித்த மாநாடு, பத்து தல மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்து சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே மாறுப்பட்டதாக இருக்கிறது.
தொடர்ந்து தமிழில் ஹிட் கொடுத்த பல இயக்குனர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. ஆனால் சிம்புவுக்காக எழுதி சிம்பு நடிக்காமல் விட்ட திரைப்படமும் உண்டு.
அந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்தது. அது வேறு எந்த படமும் இல்லை லெவன் திரைப்படம்தான். இந்த படத்தை இயக்கிய லோகேஷ் அஜில்ஸ் முதலில் இந்த படத்தின் கதையை நடிகர் சிம்புவுக்காகதான் எழுதினாராம்.
அதில் வரும் பெஞ்சமின் கதாபாத்திரத்தின் கதையே சிம்புவுக்காக எழுதப்பட்டதுதான் என அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஏற்கனவே இரட்டையர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம்தான் மன்மதன்.
அதே மாதிரியான ஒரு திரைப்படமாக லெவன் இருந்திருக்குமே என்பது ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது.
