Connect with us

சினிமா போய் அசிங்கப்படணுமா.. அப்போதே உதயநிதிக்கு வார்னிங் கொடுத்த மனைவி!..

Cinema History

சினிமா போய் அசிங்கப்படணுமா.. அப்போதே உதயநிதிக்கு வார்னிங் கொடுத்த மனைவி!..

Social Media Bar

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் அவர்களுக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற வேண்டும் என்கிற ஆசை எப்போதும் இருக்கும். உதாரணத்திற்கு சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லெஜெண்ட் சரவணா கூட சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு படத்தில் நடித்தார் அல்லவா!

அதேபோல முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலினும் சிறிது காலம் சினிமாவில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்ததே. அவரது முகத்தை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்துவதற்காக சினிமாவில் நடிக்க தொடங்கினார் என்றாலும் அதற்கு ஒரு ஆரம்ப கதை உண்டு.

இயக்குனர் ராஜேஷ் மூலமாகத்தான் சினிமாவிற்கு அறிமுகமானார் உதயநிதி. பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தை உதயநிதிதான் வாங்கி வெளியிட்டார். அந்த படம் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். அதே போல அதற்கு முன்னர் சிவா மனசுல சக்தி என்கிற படத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார். அந்த படமும் நகைச்சுவை படம்தான். எனவே இந்த மாதிரியான நகைச்சுவை படங்களில் நடிப்பதற்கு உதயநிதிக்கு அப்போது ஆசை இருந்தது.

எனவே இயக்குனர் ராஜேஷிடம் சென்ற உதயநிதி எனக்கும் ஒரு கதை சொல்லுங்க சார் எனக்கு கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் பாண்டிச்சேரியில் கல்யாணமாகும் காதலியின் கல்யாணத்தை நிறுத்த நீங்களும் உங்கள் நண்பரும் செல்கிறீர்கள், இதுதான் கதை என கூறியுள்ளார். உடனே சூப்பரா இருக்கு இதில் நான் நடிக்கிறேன் என்று உதயநிதி கூறியுள்ளார். அப்படி உதயநிதி கம்மிட்டான திரைப்படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி.

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடிக்கப் போகிறேன் என்று உதயநிதி அவரது மனைவியிடம் கூறிய போது அவர் சினிமால போய் கண்டிப்பாக அசிங்கப்படனுமா? என நகைச்சுவையாக கேட்டுள்ளார். ஆரம்பக்கட்டத்தில் அதே போல நிறைய எதிர்மறையான கருத்துக்களை சந்தித்தார் உதயநிதி. இதை ஒரு பேட்டியில் உதயநிதி பகிர்ந்துள்ளார்.

To Top