Connect with us

எதிர்நீச்சல் நாடகத்துக்கு வேக வேகமாக எண்டு கார்டு போடுதா சன் டிவி!.. இதான் காரணமா?

vela ramamoorthy ethir neechal

News

எதிர்நீச்சல் நாடகத்துக்கு வேக வேகமாக எண்டு கார்டு போடுதா சன் டிவி!.. இதான் காரணமா?

Social Media Bar

சன் டிவியில் டி.ஆர்.பியில் அதிக வரவேற்பை பெற்ற நாடகங்களில் எதிர்நீச்சல் நாடகம் இருந்தது. முதலில் மாரிமுத்து இதில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதைப்படி படித்த பெண்ணாகிய ஜனனி என்கிற பெண், பெண்களை அடிமையாக நடத்தும் ஒரு குடும்பத்துக்கு சென்று அந்த குடும்பத்தையே மாற்றி அமைப்பதாக கதை இருந்தது.

மாரி முத்து ஆதி குணசேகரனாக நடித்தப்போது அது அந்த நாடகத்துக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனால் ஆதி குணசேகரன் இடையில் காலமான பிறகு எதிர்நீச்சல் நாடகத்திற்கான வரவேற்பும் குறைந்தது. அதன் பிறகு வந்த வேலராம மூர்த்திக்காக அந்த கதாபாத்திரத்தையே மாற்றி அமைத்தனர்.

மாரிமுத்துவிற்கு பெண்களை அடிப்பது போன்ற காட்சி எல்லாம் இருக்காது. ஆனால் வேலராம மூர்த்தியை மிகவும் கொடுமையாக காட்டியது மக்களுக்கு முக சுழிப்பை ஏற்படுத்தியது. மேலும் தற்சமயம் அந்த நாடகத்தின் கருவே மாறி போய்விட்டது.

இதனால் நாடகத்திற்கான வரவேற்பும் குறைந்துவிட்டது. எனவே இந்த வார இறுதியோடு எதிர்நீச்சல் நாடகத்தை முடிக்க உள்ளதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல நாடகத்தின் கதையும் இந்த வாரம் வேக வேகமாக சென்று கொண்டுள்ளது.

ஆனாலும் நாடகம் முடிய போவதாக அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. நாடகம் செல்லும் வேகத்தை வைத்து பார்வையாளர்களே அப்படியான முடிவை எடுத்துள்ளனர். அதற்கு தகுந்தாற் போல சன் டிவியும் புதிதாக இரண்டு நாடகங்களை இறக்கியுள்ளது.

To Top