என்ன விட சிவாஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குற!.. சரோஜா தேவியின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

முதன்முதலில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் போட்டி போட்டு கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் தான், பொதுவாக ரசிகர்களுக்குள்தான் யாருடைய நடிகர் பெரிய நடிகர் என்கிற போட்டி இருக்கும்.

ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனை பொருத்தவரை அவர்கள் இருவருக்குள்ளும் யார் பெரிய நடிகர் என்கிற போட்டி இருந்தது. இதனால் அவர்கள் இருவரது திரைப்படங்களிலும் நடிப்பவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டன.

அப்படி ஒரு முறை சரோஜாதேவிக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நடிகை சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக படகோட்டி என்கிற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதே சமயத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக புதிய பறவை என்னும் படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இரண்டு படங்களின் படப்பிடிப்பிற்கும் மாற்றி மாற்றி சென்று கொண்டிருந்தார் சரோஜாதேவி.

ஆனால் எம்.ஜி.ஆரின் படகோட்டியை விடவும் சிவாஜி கணேசன் நடிக்கும் புதிய பறவை படத்திற்கு சரோஜாதேவி அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல எம்.ஜி.ஆர்க்கு தெரிந்தது. இதனால் கோபடமைந்த எம்.ஜி.ஆர் சரோஜாதேவி அழைத்து அவரிடம் இதற்காக சண்டையிட்டுள்ளார்.

ஆனால் படகோட்டியில் வெறும் கதாநாயகி கதாபாத்திரம் மட்டுமே சரோஜாதேவிக்கு இருந்தது. ஆனால் புதிய பறவை திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அந்த படத்தில் உளவாளியாக சென்று சிவாஜி கணேசனின் கொலையை கண்டறியும் ஒரு போலீஸ் அதிகாரியாக சரோஜாதேவி இருப்பார். எனவே தான்அவர் புதிய பறவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.