News
அவரு நல்லவருதான் பாவம் நேரந்தான் இல்ல!.. மோடியை கலாய்த்து பேசிய விஜய் சேதுபதி பட இயக்குனர்!..
ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அதிகமான திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும் இவரை பெரும்பான்மையான தமிழ் இயக்குனர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருவதை பார்க்க முடியும்.
குறைவான திரைப்படங்களை இயக்கினாலும் கூட அவரது திரைப்படங்களில் அவர் பேசும் விஷயங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் இறுதியாக அவர் இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இன்னும் அவர் எந்த திரைப்படமும் இயக்கவில்லை.
இந்த நிலையில் தற்சமயம் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது மோடியை விமர்சித்து பேசியிருப்பது ட்ரெண்டாகி வருகிறது. அதில் பேசும்போது எனக்கு தமிழை நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை.

என்னை போலவே தமிழை கற்றுக்கொள்ள ஒருவர் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் என்னை விட அதிகம் தமிழின் மீது ஆர்வம் காட்டி வருகிறார். அவர் நல்லவர்தான் ஆனால் அவருக்கு தமிழை படிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் மாற்றம் ஏற்பட்டால் அவர் வீட்டில் அமர்ந்து தமிழ் படிக்க நேரம் கிடைக்கும் என நம்புகிறேன் என கூறியிருந்தார்.
சமீப காலமாக பிரதமர் மோடிதான் தமிழில் பேசுவதற்கு அதிக முயற்சிகளை செய்து வருகிறார். எனவே அவரைதான் தியாகராஜன் குமாரராஜா குறிப்பிடுகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
