விட்டுக்கொடுத்ததால் விஜய்க்கு வந்த வாய்ப்பு.. யாரும் பேச மாட்டீங்க..! திருமாவளவன் காட்டம்..!
சமீபத்தில் விகடம் பிரசுரம் அம்பேத்கர் குறித்து பலரும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக ஒரு புத்தகத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது. இந்த புத்தகத்தில் தொல் திருமாவளவனின் கட்டுரை தொகுப்பும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் இந்த நூலின் அறிமுக விழாவில் திருமாவளவன் கலந்துக்கொள்வது என முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்சமயம் இந்த நூலின் வெளியீட்டு விழாவில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் கலந்துகொள்வதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது விஜய்யின் மாநாட்டுக்கு முன்பே அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள போவதாக என்னிடம் கூறியிருந்தனர்.
விட்டுக்கொடுத்தேன்:
ஆனால் விஜய் மாநாட்டுக்கு பிறகு விஜய் திருமா ஒரே மேடையில் என நூல் வெளியீட்டு விழா குறித்து பூதாகரப்படுத்தி நாளேடு ஒன்று எழுதியது. அவர்களுக்கு எப்படி தெரிந்தது என தெரியவில்லை.
அதனை அடுத்து தி.மு.க வுடனான எங்கள் கூட்டணியை தவிர்ப்பதற்காகவே இந்த வேலைகள் நடந்து வருகின்றன. இதனை அறிந்த காரணத்தால் நானே விகடனிடம் விஜய்யை வைத்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளுமாறு கூறிவிட்டேன்.
ஆனால் நான் விட்டுக்கொடுத்ததை பற்றி இங்கு யாரும் பேச மாட்டார்கள்.. என்னை குறித்து எதிர்மறையாகதான் பேசுவார்கள் என கூறிய திருமாவளவன் இன்னமும் நிறைய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.