Connect with us

இதனால்தான் விடாமுயற்சி தாமதமானது!.. இயக்குனர் சொன்ன விளக்கம்.. உண்மையா? உருட்டானு தெரியலையே!..

News

இதனால்தான் விடாமுயற்சி தாமதமானது!.. இயக்குனர் சொன்ன விளக்கம்.. உண்மையா? உருட்டானு தெரியலையே!..

Social Media Bar

துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் தயாராக இருந்த படம் விடா முயற்சி. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கவிருந்தார். ஏற்கனவே மகிழ் திருமேணி இயக்கிய கலக தலைவன், மீகாமன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

எனவே இந்த படமும் சிறப்பாக இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கே வெகு காலங்கள் ஆனது. அஜித் சுற்றுலா சென்றதே இதற்கு காரணம் என நம்பப்பட்டது. ஆனால் ஒரு வகையில் படப்பிடிப்பு தாமதமானதற்கு மகிழ் திருமேணியும் கூட காரணம்தானாம்.

இதுக்குறித்து மகிழ் திருமேணி ஒரு பேட்டியில் கூறும்போது, ஹாலிவுட் திரைப்படங்கள் எடுக்கும்போது அவர்கள் படத்திற்கான முன் தயாரிப்புகளுக்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் படப்பிடிப்பை குறைந்த நாட்களிலேயே முடித்துவிடுவார்கள். அப்படி செய்தால்தான் ஒரு படம் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.

எனவே விடாமுயற்சி திரைப்படத்திற்கும் அதே போல ப்ரீ ப்ரொடக்‌ஷனுக்கு அதிக நாட்களை எடுத்துக்கொண்டு வேலை பார்த்திருப்பார் நம் இயக்குனர் என நினைக்கின்றனர் தல ரசிகர்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் விடாமுயற்சி சிறப்பான படமாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

To Top