Connect with us

விஜயகாந்துக்காக எனக்கு ஒரே ஒரு ஆசை உண்டு!.. நடிகர் சங்கத்தால் செய்ய முடியுமா? ஓப்பன் டாக் கொடுத்த நடிகர் தியாகு!.

thiyagu vijayakanth

News

விஜயகாந்துக்காக எனக்கு ஒரே ஒரு ஆசை உண்டு!.. நடிகர் சங்கத்தால் செய்ய முடியுமா? ஓப்பன் டாக் கொடுத்த நடிகர் தியாகு!.

Social Media Bar

Actor Vijayakanth: தென்னிந்திய நடிகர்களில் சிறப்பு வாய்ந்தவராக நடிகர் விஜயகாந்த் பார்க்கப்படுகிறார். பொதுவாக தமிழ் சினிமா நடிகர்கள் என்றால் திரைப்படங்களில் நடிப்பதோடு இருந்து விடுவார்கள். ஒரு வேலை மக்களுக்கு நன்மைகள் செய்வதாக இருந்தாலும் கூட குறைந்த அளவில்தான் செய்வார்கள்.

ஆனால் விஜயகாந்தை பொருத்தவரை அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் விஜயகாந்த். மிகவும் எளிமையான ஒரு மனிதராக விஜயகாந்த் இருந்தாலும் தொடர்ந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வந்தவர் விஜயகாந்த்.

vijayakanth
vijayakanth

சமூக வலைதளங்கள் வளர்ந்து வந்த பிறகு பலரும் அவரைக் குறித்து பேசிய பிறகுதான் விஜயகாந்த் எவ்வளவு நன்மைகள் செய்திருக்கிறார் என்பது மக்களுக்கு தெரிய துவங்கியது. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் விஜயகாந்த்.

தியாகுவின் கோரிக்கை:

அவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்று கணக்கிட்டால் சிலர் தான் அதில் இருப்பார்கள். அதில் முக்கியமானவர் நடிகர் தியாகு. நடிகர் தியாகு இளமை காலம் முதலே விஜயகாந்த் உடன் நண்பராக இருந்து வருகிறார். அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இந்த நடிகர் சங்கத்திற்காகவும் அந்த சங்க ஊழியர்களுக்காகவும் எவ்வளவு நன்மைகளை விஜயகாந்த் செய்திருக்கிறார் என கூறினார்.

நடிகர் சங்க கட்டிடம் கடனில் சிக்கிக் கொண்டிருந்த பொழுது இதற்காக மலேசியா சிங்கப்பூர் என்று நாடுகளுக்கு சென்று அங்கு நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டி அந்த கடனை அடைத்தவர் விஜயகாந்த். அவர் மட்டும் அன்று அந்த விஷயத்தை செய்யவில்லை என்றால் இன்று அந்த நடிகர் சங்கம் கட்டிடம் இருந்த இடமே இருந்திருக்காது என்று கூறுகிறார் தியாகு.

மேலும் அவர் கூறும் பொழுதே இவ்வளவு நன்மைகள் செய்த விஜயகாந்திற்காக அவரது மனைவி பிரேமலதா எந்த ஒரு கோரிக்கையும் கேட்கவில்லை. அவரது உடலை புதைப்பதற்கு கூட இடம் கேட்கவில்லை ஆனால் எனக்கு ஒரு ஆசை உண்டு.

புதிதாக கட்டும் நடிகர் சங்க கட்டிடத்தின் முன்புறம் விஜயகாந்தின் சிலையை வைக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கிறது.. அதை நடிகர் சங்கம் செய்யுமா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அதை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார் தியாகு.

To Top