Connect with us

என் அம்மா இறந்தப்ப பெரும் சம்பவத்தை பண்ணி என் கூட நின்னான் விஜயகாந்த்!.. மனம் நெகிழும் நடிகர் தியாகு!.

vijayakanth thyagu

Cinema History

என் அம்மா இறந்தப்ப பெரும் சம்பவத்தை பண்ணி என் கூட நின்னான் விஜயகாந்த்!.. மனம் நெகிழும் நடிகர் தியாகு!.

Social Media Bar

Actor Vijayakanth : சினிமா வட்டாரத்தில் விஜயகாந்தோடு நட்பாக இருந்த முக்கியமான பிரபலங்களில் நடிகர் தியாகுவும் ஒருவர். பொதுவாக விஜயகாந்த் அனைவருக்குமே நன்மைகளை செய்யக்கூடிய ஒரு நடிகராக இருந்திருக்கிறார்.

யார் எவர் என்று தெரியாதவருக்கு கூட உணவளிக்கும் ஒருவராகத்தான் விஜயகாந்தை மக்கள் பார்த்திருக்கின்றனர். முதன் முதலாக சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்த பொழுது விஜயகாந்த் அதிகமாக கஷ்டப்பட்டது சாப்பாட்டுக்காகதான்.

அப்பொழுது யாரும் சென்னையில் இலவசமாக உணவு வழங்கவில்லை. எனவே அடுத்து வரும் மக்கள் உணவுக்காக மட்டும் என்றுமே கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுக்க மக்களுக்கு உணவளிப்பதை ஒரு சேவையாக செய்து வந்தார்.

Vijayakanth
Vijayakanth

பல உதவி இயக்குனர்கள் கூட கஷ்ட காலங்களில் விஜயகாந்த் சாரின் அலுவலகத்திற்கு சென்று தான் உணவு உண்போம் என்று கூறி இருக்கின்றனர். இப்படி தெரியாதவர்களுக்கே பல நன்மைகளை செய்தவர் தெரிந்த நண்பர்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்திருப்பார் என்பதை தியாகு கூறுவதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

தியாகுவின் தாய் காலமானபோது விஜயகாந்த் தமிழ்நாட்டிலேயே இல்லை அவர் படப்பிடிப்புக்காக வேறு மாநிலத்தில் இருந்தார். ஆனால் தியாகுவின் தாய் தவறிவிட்டதை அறிந்தவுடன் தியாகுவிற்கு போன் செய்து அந்த விஷயத்தை குறித்து விசாரித்தார்.

அப்பொழுது தியாகு இல்லை நீ வரவேண்டும் என்று கூட தேவையில்லை உங்களுக்கு எதுக்கு சிரமம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இருந்தாலும் கேட்காத விஜயகாந்த் உடனே  விமான பயணம் செய்து தியாகுவின் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு வந்த விஜயகாந்த் மெயின் ரோட்டிலேயே காரை நிறுத்தவும் அதற்கு பின்னால் ஒரு 500 வண்டிகள் ஸ்தம்பித்து நின்று விட்டன.

vijayakanth
vijayakanth

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாது தியாகுவிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார் விஜயகாந்த். இந்த நிலையில்  அங்கு வந்த அரசு அதிகாரிகள் காரை எடுக்கும்படி விஜயகாந்த்திடம் கேட்டுக் கொண்டனர். அப்போது விஜயகாந்த் எனது நண்பனின் தாய் இறந்திருக்கிறார்.

நான் அது குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறேன் இப்பொழுது என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். மேலும் முதலமைச்சரே கூறினாலும் இப்பொழுது என்னால் ஏதும் செய்ய முடியாது உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார் விஜயகாந்த்.

இதை பார்த்த தியாகு பிரச்சனை எல்லாம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் விஜயகாந்த் அங்கிருந்து கிளம்பி இருக்கிறார் இந்த விஷயத்தை தியாகு ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

To Top