News
கார்த்தியை வச்சி படம் எடுக்க சான்ஸ் வந்துச்சு.. ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சேன்… ஓப்பன் டாக் கொடுத்த நடிகர் தியாகு!..
Thiyagu: சினிமாவில் நடித்த சில நடிகர்களை நம்மால் மறக்க முடியாது. அந்த அளவிற்கு அவர்களின் கதாபாத்திரம் நம்முடைய மனதில் பதிந்திருக்கும். அவர்கள் வில்லன் கதாபாத்திரம் நடித்தாலும், காமெடி கதாபாத்திரம் நடித்திருந்தாலும் அல்லது ஹீரோ கதாபாத்திரம் நடித்திருந்தாலும், அவரின் நடிப்பு நம் மனதை விட்டு நீங்காது. அந்த வகையில் 80ஸ்களின் பிற்பகுதியில் நகைச்சுவை நடிகராகவும், வில்லன் நடிகராகவும் இருந்தவர் தியாகு.
இவர் தற்பொழுது சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இவர் பிரபல முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க இருந்ததை பற்றி கூறியிருக்கிறார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நடிகர் தியாகு
இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக பல படங்களில் நடித்து வந்திருக்கிறார். அதிலும் 80ஸ்களின் பிற்பகுதிகளிலும், 90ஸ்களின் முற்பகுதிகளிலும் பல குணசத்திர வேடங்களில் நடித்து வந்திருக்கிறார்.
இவர் வயலின் கலைஞர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் பேரன் ஆவார். நடிகர் தியாகுவை அனைவரும் நகைச்சுவை தியாகு என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு இவருடைய நடிப்பு திறமை தனித்துவமாக படங்களில் தெரியும்.
இவர் தற்பொழுது வரை சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் தன்னுடைய வாழ்க்கையை ஒரு தலை ராகம்,பாலைவனச்சோலை போன்ற படங்களில் ஆரம்பித்து சமீபத்தில் சாமி 2 படம் வரை நடித்திருக்கிறார்.
பிரபல நடிகரை வைத்து படம் எடுக்க நினைத்த தியாகு
இவரும் நடிகர் கார்த்தியும் நண்பர்கள் என்றும், நான் கிழக்கு வாசல் படம் முடிந்த பிறகு நடிகர் கார்த்தியை வைத்து படம் எடுப்பதாக நினைத்தேன். ஆனால் நல்ல வேலை நான் எடுக்கவில்லை. அப்பொழுது தயாரிப்பாளர்கள் பணம் தருகிறார்கள் என்பதற்காக பணம் எடுக்க நினைத்தால் நாம் என்ன ஆகுவது.

எனவே கடம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. நல்ல கதை, நல்ல ஸ்கிரிப்ட் இருந்து படம் எடுக்கலாம். ஒருவர் பணம் கொடுப்பதற்காக நாம் படத்தை எல்லாம் எடுக்க முடியாது என அவர் கூறினார்.
மேலும் நானும் நடிகர் கார்த்தியும் வாடா போடா என்று பேசக்கூடிய அளவிற்கு நண்பர்கள் எனவும் அவர் அந்த பேட்டியில் கூறினார். தற்பொழுது இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
