OTT
ஓ.டி.டியில் முன்னணி.. ட்ரெண்டிங்கில் இருக்கும் தக் லைஃப் இதுதான் காரணம்..
சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு முக்கிய கதாபாத்திரமாக நடித்து வெளியான திரைப்படம் தக் லைஃப். ஒரு நல்ல திரைப்படமாக இருந்தாலும் கூட திரையரங்குகளில் அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு என்பது கிடைக்கவில்லை.
அதற்கு முக்கிய காரணம் திரைப்படம் குறித்து வெளியான விமர்சனங்கள் தான் என்று கூறப்படுகிறது. படம் குறித்து நிறைய மோசமான விமர்சனங்கள் அப்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதனை தொடர்ந்து படத்திற்கான வசூல் என்பதும் குறைந்தது.
தொடர்ந்து தக் லைஃப் திரைப்படம் ஓ.டி.டியில் விற்பனையாவதிலும் இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டன. 120 கோடிக்கு இந்த திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்குவதாக இருந்தது.
ஆனால் இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற காரணத்தினால் அதைவிட குறைவான தொகைக்குதான் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை வாங்கியது. ஆனால் இப்பொழுது ஓடிடிக்கு வந்த பிறகு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
வெளியான ஒரு வாரங்களிலேயே நெட்ஃப்ளிக்ஸ் அதிக பார்வைகளை பெற்ற ஒரு படமாக தக்லைஃப் திரைப்படம் மாறி இருக்கிறது.
