Connect with us

Kamalhaasan: மக்கள் காதில் பூ சுத்திட்டாரா ஆண்டவர்!.. தக் லைஃப் படத்தின் டீசர் உண்மை கிடையாது!..

kamalhaasan

News

Kamalhaasan: மக்கள் காதில் பூ சுத்திட்டாரா ஆண்டவர்!.. தக் லைஃப் படத்தின் டீசர் உண்மை கிடையாது!..

Social Media Bar

Kamalhaasan Thug Life : மணிரத்தினம் திரைப்படம் என்றாலே அதற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. ஏனெனில் மற்ற படங்களில் இருந்து மணிரத்தினம் திரைப்படத்தில் திரைக்கதை மற்றும் வசனம், ஒளிப்பதிவு ஆகியவற்றில் மாற்றங்கள் இருப்பதை பார்க்க முடியும்.

அவர் இயக்கிய நாயகன், தளபதி போன்ற படங்கள் இப்போதுவரை தமிழ் சினிமாவில் பிரபலமான படங்களாக இருக்கின்றன. ஆனால் அதற்கு பிறகு ரஜினி மற்றும் கமலை வைத்து மணிரத்தினம் திரைப்படமே எடுக்கவில்லை என்றே கூறலாம். ஆனால் தற்சமயம் கமல்ஹாசனும் மணிரத்தினமும் ஒன்றினைந்துள்ளனர் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும்.

தக் லைஃப் என்னும் இந்த திரைப்படத்தின் டீசர் ப்ரோமோ வெளியாகியிருந்தது. அதில் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என கூறி அனைவரிடமும் விமர்சனத்திற்கு உள்ளானார் ஆண்டவர். விடுதலை இந்தியாவிற்கு முன்பு தக்கர் என்கிற வழிப்பறி கொள்ளையர்கள் குழு இருந்தது.

அந்த குழு கழுத்தில் சுருக்கு போட்டு பொதுமக்களை கொலை செய்து அவர்களது பொருட்களை திருடி செல்லும். அதனை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும். படம் விடுதலை இந்தியா காலத்திற்கும் முந்தைய காலத்தில் நடக்கும் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது,

அந்த எதிர்பார்ப்பு சரி என்பது போலவே டைட்டில் டீசரிலும் கூட கமல்ஹாசன் பழைய காலத்து உடையை அணிந்து சண்டையிட்டு கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்சமயம் வந்த செய்திகளின்படி இப்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாகதான் தக் லைஃப் திரைப்படம் இருக்கிறதாம்.

அந்த டைட்டில் டீசருக்கும் படத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. படம் முற்றிலுமாக வேறு மாதிரியான கதையை கொண்டது என கூறப்படுகிறது.

To Top