மலேசியாவில் மாஸ் காட்டிய துணிவு? – சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற கட் அவுட்!

நேற்று உலகம் முழுக்க கோலாகலமாக துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியாகின. வெளியானது முதல் இப்போது வரை இரண்டு திரைப்படங்களுமே ஹவுஸ் ஃபுல் ஆகி வருகிறது.

பொதுவாக ரசிகர்கள் தங்கள் நட்சத்திரங்களுக்கு முதல் நாள் ஷோவிற்கு பெரிய கட் அவுட் வைப்பது அதற்கு மாலை போடுவது, பால் அபிஷேகம் செய்வது போன்றவற்றை செய்வது வழக்கம்.

இந்த பழக்கத்தை நாடு விட்டு நாடு கடத்தியுள்ளனர் தல ரசிகர்கள். துணிவு படத்தின் முதல் காட்சியானது காலை 8.30 மணிக்கு மலேசியாவில் வெளியானது.

மலேசியாவில் உள்ள அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடும் விதமாக பட்டாசுகளை வெடித்துள்ளனர். அது மட்டுமின்றி பி.ஜே.எல்.எப்.எஸ் என்னும் திரையரங்கில் 30 அடி துணிவு கட் அவுட்டை வைத்துள்ளனர். இதுவரை மலேசியாவில் எந்த கதாநாயகருக்கும் இந்த அளவு உயரத்தில் கட் அவுட் வைத்ததில்லை என கூறப்படுகிறது.

எனவே மலேசிய சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது துணிவு படத்திற்கு பெரும் சாதனையாக அமைந்துள்ளது.

Refresh