குக் வித் கோமாளியின் நான்காவது சீசன் அனோன்ஸ்மெண்ட்! – புது கோமாளிகள் யார் தெரியுமா?

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக உள்ள நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளியும் முக்கியமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் ஒரு குக் மற்றும் ஒரு கோமாளி இருப்பார். குக் சமைப்பதற்கு சமையலே தெரியாத கோமாளி உதவ வேண்டும்.

இதற்கு நடுவே சமைப்பவர்களுக்கு நிறைய டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அதையும் செய்து அதே சமயம் சமையலையும் செய்ய வேண்டும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் பலருக்கும் மக்கள் மத்தியில் உடனே வரவேற்பு கிடைத்துவிடுவதுண்டு.

ஏற்கனவே அதன் மூன்று சீசன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் அதன் நான்காவது சீசனுக்கான அறிவிப்பு தற்சமயம் வந்துள்ளது.

அதோடு சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள சில பிரபலங்கள் இதில் கோமாளியாக வர உள்ளனர். குக் வித் கோமாளி முந்தைய சீசனில் இருந்த சுனிதா மற்றும் மணிமேகலை இருவருமே இந்த சீசனிலும் கோமாளிகளாக வருகின்றனர்.

மூன்றாவது கோமாளியாக மோனிஷா ப்ளெஸ்ஸி இடம் பெற்றுள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் ஆவார். யூ ட்யூப் தளங்களில் சில குறும்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

நான்காவது கோமாளியாக சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஜிபி முத்து இடம்பெற்றுள்ளார். இவருக்கு ஏற்கனவே அதிகமான ரசிக வட்டாரங்கள் உள்ளன.

ஐந்தாவதாக சிங்கப்பூர் தீபன் இடம்பெற்றுள்ளார். இவர் விஜய் டிவியிலேயே அதிக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

ஆறாவதாக கில்லி படத்தில் விஜய்க்கு நண்பராக ஒட்டேரி நரி கதாபாத்திரத்தில் வரும் ஓட்டேரி சிவா நடிக்கிறார்.

இவர்களை கொண்டுதான் குக் வித் கோமாளியின் நான்காவது சீசன் துவங்கப்பட இருக்கிறது.

Refresh