ஒரு நாளுக்குள் கோடிக்கணக்கான வீவ்களா? –  துணிவு ட்ரைலர் ரிவ்யூ!

அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் துணிவு. அஜித் நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது. வங்கியில் அஜித் பணம் திருடுவதை வைத்துதான் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு துணிவு படத்தில் அஜித் ஆண்டி ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது கதைப்படி ஹீரோ கெட்டவனாகதான் இருப்பார்.

அதே போல அந்த வில்லதனமான சிரிப்பு என மங்காத்தா படத்தில் இருக்கும் அதே கதாபாத்திரம் அடுத்து ஒரு வங்கியில் திருட வந்திருப்பது போலவே இருக்கிறது.

துணிவு படத்தின் சண்டைக்காட்சிகள் பீஸ்ட் படத்தோடு ஒத்திருப்பதாக ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர். மஞ்சு வாரியர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அஜித்தோடு இருக்கும் திருடும் கும்பலில் இவரும் இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமுத்திரக்கனி போலீஸாக நடித்துள்ளார்.

நேற்று வெளியானது முதல் இன்னும் ஒரு நாள் கூட முடிவடையவில்லை அதற்குள் 2 கோடி வீவ்களை கடந்து சென்றுள்ளது துணிவு ட்ரைலர். தற்சமயம் யூ ட்யூப்பில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் உள்ளது துணிவு ட்ரைலர்.

Refresh