அந்த படத்துக்கு நாலரை மணி நேரம் கதை கேட்டேன்? –  சூர்யா கேட்ட கதை எது தெரியுமா?

கோலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாநாயகர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். விஜய், அஜித், ரஜினி மாதிரியான நடிகர்கள் எப்போதாவது வித்தியாசமான கதைகளில் நடிப்பதுண்டு.

ஆனால் கமல், விக்ரம், தனுஷ், சூர்யா மாதிரியான நடிகர்கள் பல வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களில் நடித்துள்ளனர். சூர்யா கமர்ஷியல் கதைகளில் நடிப்பது போலவே சிறந்த கதைகளுக்கும் மதிப்பு கொடுப்பார்.

உதாரணத்திற்கு தற்சமயம் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த ஜெய் பீம் திரைப்படத்தை கூறலாம். ஜெய் பீம் போலவே முன்னர் சூர்யா நடித்த திரைப்படம் 24.

24 ஒரு டைம் ட்ராவல் திரைப்படமாகும். அந்த சமயத்தில் தமிழில் இன்று நேற்று நாளை என்கிற ஒரு டைம் ட்ராவல் திரைப்படம்தான் வந்திருந்தது.

தெலுங்கில் மனம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரம் கே.குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் குறித்து பேசுவதற்காக இவர் நடிகர் சூர்யாவை சந்தித்தபோது 4 ½ மணி நேரம் அவருக்கு கதை சொன்னாராம்.

பொதுவாக தயாரிப்பாளரை காண வரும் இயக்குனர்கள் முடிந்தவரை சுருக்கமாக கதையை கூறுவார்கள். ஆனால் இவர் நாலரை மணி நேரம் கதை சொல்லியும் அதை அப்படியே கேட்ட சூர்யா, படத்தின் கதை பிடித்துபோய் உடனே அதை தயாரிக்க ஒப்புக்கொண்டாராம்.

இதை நடிகர் சூர்யாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Refresh