News
எம்.ஜி.ஆர்க்கு அப்புறம் ரஜினியில்ல.. ராக்கி பாய்தான்..! – தியேட்டர் உரிமையாளர்!
யஷ் நடித்து வெளியான கேஜிஎஃப்2 வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் திருப்பூர் தியேட்டர் உரிமையாளர் படம் குறித்து பேசியுள்ளார்.

கன்னட நடிகர் யஷ் நடித்து ப்ரசாந்த் நீல் இயக்கிய படம் கேஜிஎஃப்2. முதல் பாகத்தை தொடர்ந்து எதிர்பார்ப்பில் இருந்த இந்த இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது. படம் ரிலீஸாகி நான்கு நாட்களாகிவிட்ட நிலையிலும் இன்னமும் டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது.
இந்நிலையில் கேஜிஎஃப்2 குறித்து பேசியுள்ள திருப்பூர் திரையரங்க உரிமையாளர் ஒருவர் “எம்ஜிஆர் படங்களுக்கு பிறகு எங்கள் திரையரங்கில் ப்ரொஜெக்டர் ஆஃப் பண்ணாமல் தொடர்ந்து 4 நாட்களாக கேஜிஎஃப்2 ஓடிட்டு இருக்கு. நான்காவது நாளிலும் இரவு 1 மணி ஷோ காலை 4 மணி ஷோ என எல்லாம் ஹவுஸ்புல்லா ஓடிட்டு இருக்கு” என்று தெரிவித்துள்ளார்.
