Tamil Cinema News
என் படத்தோட நிலையை நினைச்சு வருத்தமா இருக்கு… வேட்டையன் குறித்து இயக்குனர் ஞானவேல்..!
சினிமாவைப் பொறுத்தவரை இந்த முதல் நாள் விமர்சனம் என்பது இப்பொழுது பலருக்குமே பிடிக்காத ஒரு விஷயமாக மாறி வருகிறது. முன்பெல்லாம் திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்த்தால் தான் அதன் கதை என்னவென்று தெரியும் என்கிற நிலை இருந்தது.
அதனால் ரசிகர்களும் கதை என்னவென்று தெரியாமலேயே திரையரங்கிற்கு சென்று வந்தனர். ஆனால் இப்பொழுது முதல் நாள் விமர்சனம் என்கிற ஒரு விஷயம் வந்துவிட்டது.
இதனை தொடர்ந்து திரைப்படங்கள் எல்லாம் முதல் நாளே விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. முதல் நாள் எதிலும் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்கும் திரைப்படங்கள் பொதுவாக தோல்வியை காண்கின்றன. இது பல தயாரிப்பாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.
வேட்டையன் படம் குறித்து ஞானவேல்:
எனவே முதல் நாள் விமர்சனத்தை எப்படியாவது நீக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெய் பீம் மாதிரியான வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் தா.செ ஞானவேல் இது குறித்து பேசி இருக்கிறார்.
அதில் இவர் கூறும்பொழுது முதல் நாள் விமர்சனம் என்பது நியாயமானதாக இல்லை. ஒரு படம் வெளிவந்த பிறகு அது எப்படிப்பட்ட படம் என்பதை சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்தை வைத்தே முடிவு செய்கின்றனர்.
விமர்சனம் செய்பவர்களுக்கு ஒருவேளை அந்த படம் பிடிக்காமல் இருக்கலாம். அந்த கருத்தை நம்பி மக்கள் படத்தை குறை கூறுகின்றனர். இப்படிதான் வேட்டையன் படத்திற்கும் கள்ளிப்பால் கொடுத்தனர் என்கிறார் இயக்குனர் தா.செ ஞானவேல்.