டி ராஜேந்திரால்தான் நான் சினிமாவை விட்டு போனேன்!.. புலம்பிய டி.எம்.எஸ்.. இதெல்லாம் ஒரு காரணமாயா!..
தமிழில் சோக படங்களை வைத்து பெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் டி ராஜேந்திரன். அப்போதைய காலக்கட்டத்தில் அவரது திரைப்படங்களுக்கு ஒரு ரசிக பட்டாளம் இருந்தது. இப்போதெல்லாம் சோக க்ளைமேக்ஸ் கொண்ட திரைப்படங்கள் வெளியானால் அதற்கு அவ்வளவாக வரவேற்புகள் இருப்பதில்லை.
ஆனால் அப்போதெல்லாம் டி.ஆர் படங்களில் சோக க்ளைமேக்ஸ்தான் இருக்கும் என்று தெரிந்துமே மக்கள் அதை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் அவரது திரைப்படங்களில் அதிகமாக சோக பாடல்கள் இருப்பதை பார்க்க முடியும்.
இப்படி அவரது திரைப்படங்களில் சோக பாடல்கள் பாடியதுதான் தனது சினிமா வாழ்க்கையே முடிந்துப்போக காரணம் என டி.எம்.எஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது டி.ராஜேந்திரன் என ஒருவன் பெண்கள் போலவே அவனது நடவடிக்கை இருக்கும்.

என்னிடம் வந்து நான் ஒரு ராசியில்லாத ராஜா என்கிற பாடலை பாட சொன்னான். என் பெயரும் சௌந்தர் ராஜன் என இருப்பதால் ஏதோ நானே பாடுவது போல எனக்கு பட்டது. அதனால் வேண்டாம் என கூறினேன். அவன் கேட்கவில்லை.
அதோடும் விடவில்லை. என் கதை முடியும் நேரமிது என்கிற இன்னொரு பாடலையும் பாட வைத்தான். அதோடு எனக்கு சினிமாவில் வாய்ப்புகளே இல்லாமல் போனது என கூறியுள்ளார். அப்படியெல்லாம் பார்த்தால் எஸ்.பி.பி எவ்வளவு சோக பாடல்கள் பாடியுள்ளார். அவர் என்ன திரையில் வாய்ப்பு கிடைக்காமலா இருந்தார் என லாஜிக்காக கேட்கின்றனர் சினிமா ரசிகர்கள்.