எனக்கு வாய்ப்பு கிடைக்காம போனதுக்கு டி.ஆர்தான் காரணம்!.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த டி.எம் செளந்தர் ராஜன்!..
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான பாடகர்களில் முக்கியமானவர் பாடகர் டி.எம் செளந்தர் ராஜன், 1954 இல் தமிழ் சினிமாவிற்கு பாடகராக அறிமுகமான டி.எம் செளந்தர் ராஜன் தொடர்ந்து பல பாடல்களை பாடியுள்ளார்.
அவற்றில் அதிகமாக எம்.ஜி.ஆருக்காக பாடல்கள் பாடியுள்ளார். அதிகப்பட்சம் எம்.ஜி.ஆர் பாடல்கள் என்றாலே அது டி.எம்.எஸ் பாடியதாகதான் இருக்கும். அதே சமயம் சிவாஜி படங்களுக்கும் டி.எம் செளந்தர் ராஜன் பாடியுள்ளார்.
கலர் சினிமா வந்தப்பிறகும் கூட பல படங்களில் அவர் பாடல்கள் பாடி வந்தார். டி.எம் செளந்தர் ராஜனின் முருகன் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த பிறகும் கூட அவர் நடித்த அன்னை ஓர் ஆலயம் படத்தில் டி.எம் செளந்தர்ராஜன் பாடல்கள் பாடியிருந்தார்.

கலர் சினிமா வந்த சில வருடங்களில் திரைப்படங்களில் வாய்ப்புகளை இழந்தார் டி.எம் செளந்தர் ராஜன். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது நான் வாய்ப்பை சினிமாவில் வாய்ப்பை இழந்ததற்கு முக்கிய காரணம் இயக்குனர் டி.ராஜேந்திரன்தான் என கூறினார்.
டி.ராஜேந்திரன் அவரது பாடல்களில் வைத்த வார்த்தைகள்தான் இதற்கு காரணம் என கூறுகிறார் டி.எம் செளந்தர்ராஜன். நான் ஒரு ராசியில்லாத ராஜா என பாட சொன்னார் டி.ராஜேந்திரன் அதே போல என் கதை முடியும் நேரமிது என்ற பாடலையும் பாட சொன்னார்.
நான் அப்போதே அந்த பாடல்களை பாடுவதற்கு மறுத்துவிட்டேன். ஆனால் என்னை வற்புறுத்தி அந்த பாடலை பாட வைத்தார். அதன் பிறகு எனக்கு வாய்ப்புகளே கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் ஒரு வகையில் அதுவும் கூட மகிழ்ச்சிதான் அதனால்தான் இப்போதைய தலைமுறையினருக்கு எனது அருமை தெரிகிறது. என கூறியுள்ளார் டி.எம் செளந்தர்ராஜன்.