Connect with us

மன்சூர் அலிக்கான் பிரச்சனைக்கு பக்கம் பக்கமா பேசிட்டு செய்யுற காரியமா இது!.. த்ரிஷாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!..

trisha

News

மன்சூர் அலிக்கான் பிரச்சனைக்கு பக்கம் பக்கமா பேசிட்டு செய்யுற காரியமா இது!.. த்ரிஷாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!..

Social Media Bar

Trisha and mansoor alikhan : கடந்த வாரம் த்ரிஷா மன்சூர் அலிக்கான் பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. த்ரிஷாவும் மன்சூர் அலிக்கானும் சேர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து ஒன்றை மன்சூர் அலிக்கான் பேசியிருந்தார்.

அதாவது முன்பெல்லாம் கதாநாயகிகளை கற்பழிக்கும் காட்சிகள் சினிமாவில் இருக்கும். வில்லன் நடிகர்கள் எல்லாம் அந்த நடிகையை தூக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. த்ரிஷாவோடு ஒரு படுக்கறை காட்சி கூட இல்லை. படப்பிடிப்பில் அவரை பார்க்கவே இல்லை என மன்சூர் அலிக்கான் பேசியிருந்தார்.

இது த்ரிஷாவிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதை அடுத்து அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை வெளியிட்டார். பிறகு குஷ்பு போன்ற சில பிரபலங்களும் த்ரிஷாவிற்கு ஆதரவாக பேச துவங்கினர். பிறகு மன்சூர் அலிக்கான் மன்னிப்பு கேட்டதை அடுத்து அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தற்சமயம் அனிமல் என்கிற ஹிந்தி திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் த்ரிஷா. வெளியான நாள் முதலே தென்னிந்தியாவில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது அனிமல் திரைப்படம்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆணாதிக்க தன்மையை பிரதிபலிப்பதாகவும், சமூகத்தை தவறான பாதைக்கு கொண்டு போகும் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சிறப்பான திரைப்படம் அனிமல் என பதிவிட்டுள்ளார்.

இவ்வளவு நாள் பெண்கள் உரிமை என பேசிய த்ரிஷா இப்போது இந்த படத்திற்கு எப்படி சப்போர்ட் செய்கிறார். இந்த படத்தை எதிர்த்து அல்லவா அவர் பதிவிட்டிருக்க வேண்டும். அப்படியென்றால் இதற்கு முன்பு செய்தது விளம்பரத்திற்காகவா? அல்லது பாலிவுட்டில் வாய்ப்பை பெறுவதற்காக இதை செய்கிறாரா என கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top