த்ரிஷாவிற்கு குவியும் வாய்ப்புகள்! –  அடுத்த சான்ஸ் கமலுடன்!

தமிழில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை த்ரிஷா. வெகு நாட்களாக குறைவான அளவிலேயே வாய்ப்புகளை பெற்று வந்தார் த்ரிஷா. இந்த நிலையில் போன வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது.

Social Media Bar

அதில் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே கவனத்தை ஈர்த்ததை அடுத்து தொடர்ந்து த்ரிஷா வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதே போல விக்னேஷ் சிவன் இயக்கி அஜித் நடிக்கும், அஜித்தின் அடுத்த படத்திலும் கூட த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதற்கு பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில் இவர் அடுத்து கமல் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சமீபத்தில் கமல் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வைத்து மணிரத்னம் படம் எடுக்க போவதாக ஒரு அறிவிப்பு வந்தது.

அந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகார்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.