Connect with us

20 வருடங்களுக்கு முன்பு உலகை உலுக்கிய சுனாமி… நிஜ வீடியோக்கள் வழியாக காட்டும் ஆவணப்படம்.. தமிழில்..!

Movie Reviews

20 வருடங்களுக்கு முன்பு உலகை உலுக்கிய சுனாமி… நிஜ வீடியோக்கள் வழியாக காட்டும் ஆவணப்படம்.. தமிழில்..!

Social Media Bar

20 வருடங்களுக்கு முன்பு உலகையே புரட்டி போட்ட ஒரு விஷயமாக சுனாமி இருந்தது. டிசம்பர் 26 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவிற்கு அருகில் கடலில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தின் காரணமாக இரண்டு பக்கமும் பெரிய அலைகள் உருவானது.

ஒரு பக்கம் இந்தோனேசியா தாய்லாந்து மாதிரியான நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மற்றொரு பக்கம் இலங்கை இந்தியா கென்யா மாதிரியான தேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சுனாமியால் வந்த அழிவு:

இவ்வளவு பெரிய இயற்கை பேரழிவை இதற்கு முன்பு வரலாற்றில் மனித குலம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இல்லாத காரணத்தினால் முன்கூட்டியே சுனாமி குறித்த விஷயங்கள் ஹவாய் தீவுகளில் கண்டறியப்பட்டாலும் கூட அவர்களால் அந்த தகவலை அனைத்து நாட்டிற்கும் சொல்ல முடியவில்லை.

இந்த நிலையில் அந்த சமயத்தில் சுனாமியை ஒவ்வொரு நாடும் எப்படி கையாண்டது என்பதை அப்பொழுது இருந்த சுற்றுலாப் பயணிகள் போன்றோர் எடுத்த வீடியோக்களின் அடிப்படையில் ஆவணப்படுத்தி இருக்கிறது நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம்.

Tsunami race against time என்கிற இந்த ஆவணப்படம் நாம் இதுவரை சுனாமி பற்றி காணாத பல விஷயங்களை கூறுவதாக இருக்கிறது. தற்சமயம் ஹாட்ஸ்டார் இல் தமிழில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படத்தில் மூன்று தொடர்கள் தமிழில் வந்துள்ளன இன்னும் ஒரு தொடர் மட்டும் தமிழில் வர வேண்டி இருக்கிறது சுனாமி பற்றிய மிக முக்கியமான விஷயங்களை பேசும் ஒரு ஆவண படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
To Top