ஏன் நான் அடுத்த விஜய் ஆக கூடாதா? – கேள்வி எழுப்பிய டி.டி.எஃப் வாசன்!

யூ ட்யூப்பர்களில் எப்போதும் சர்ச்சைக்குள்ளாகும் யூ ட்யூப்பர்களில் டி.டி.எஃப் வாசன் முக்கியமானவர். தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகும் வகையில் வீடியோக்கள் வெளியிடுவது, வசனங்களை பேசுவதன் மூலம் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார்.

தொடர்ந்து சமூகம் மீது அக்கறை இல்லாமல் டி.டி.எஃப் வாசன் செயல்படுகிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் அய்யப்பன் ராமசாமியுடன் டி.டி எஃப் வாசன் இண்டர்வுயூ ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அதில் டி.டிஎஃப் சர்ச்சையாக பேசிய பல விஷயங்கள் குறித்து விளக்கம் கேட்டு வந்தார் அய்யப்பன் ராமசாமி. அப்போது தளபதி விஜய் போல கூட்டத்தை கூட்டி அவரை போலவே செல்ஃபி எடுத்து போட்டு இருந்தீர்கள். தளபதிக்கு அடுத்த நிலையை எட்ட பார்க்கிறீர்கள் என மக்கள் நினைக்கின்றனர் என கேட்டிருந்தார் அய்யப்பன் ராமசாமி.

அதற்கு பதிலளித்த டி.டி.எஃப். ஏன் அண்ணா சாதரண அடித்தட்டு இடத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் தளபதிக்கு நிகராக வர கூடாதா? என கேள்வி எழுப்பியிருந்தார். போக போக அய்யப்பன் ராமசாமி கேட்ட கேள்விகள் பிடிக்காததால் அந்த இடத்தை விட்டு பாதியிலேயே கிளம்பினார் டி.டி.எஃப்.

Refresh