Connect with us

விஜய்க்கும் எனக்கும் பிரச்சனையாக இதுதான் காரணம்!.. உண்மையை கூறிய உதயநிதி!.

vijay udhayanithi

News

விஜய்க்கும் எனக்கும் பிரச்சனையாக இதுதான் காரணம்!.. உண்மையை கூறிய உதயநிதி!.

Social Media Bar

Udhayanidhi: ஒரு சில நடிகர் இயக்குனர்களாகவும், தயாரிப்பாளராகவும், பன்முகங்களை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அந்த வகையில் சினிமா பின்புலத்தை கொண்டவராகவும் அரசியல் பின்புலத்தை கொண்டவராகவும் இருந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

ஆரம்பத்தில் பல படங்களை தயாரித்து வந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்த உதயநிதி தற்போது அரசியலில் வெற்றி கண்டிருக்கிறார்.

தற்போது அவர் நடிகர் விஜய் பற்றி கூறியிருக்கும் ஒரு தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிகராக இருந்து, தற்போது அரசியல்வாதியாக திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கிறார்.

இவர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்திருக்கிறார். இவர் விஜய், திரிஷா நடித்த குருவி என்னும் படத்தை முதன் முதலில் தயாரித்த படமாகும்.

udhayanidhi

இந்நிலையில் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன் பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர் போன்ற பல படங்களிலும் சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்திலும் நடித்து புகழடைந்தார்.

விஜயை பற்றி கூறிய உதயநிதி

சமீபத்தில் பேட்டியில் பங்கேற்ற உதயநிதி ஆடியன்ஸ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி வந்தார். அப்போது ஒரு பெண் நீங்கள் விஜய்யுடன் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவதாக கூறினீர்கள். ஏன் அவருடன் விலகி இருக்கிறீர்கள் என கேட்டனர்.

vijay

அப்போது விஜய் பற்றி கூறிய உதயநிதி, நானும் அவரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவர் யாருடனும் நெருங்கி பழக மாட்டார். மேலும் நாங்கள் நண்பர்களாக இருந்தபோது யாரோ சிலர் என்னைப்பற்றி அவரிடமும், அவரைப்பற்றி என்னிடமும் தவறாக கூறுகிறார்கள்.

அதன் பிறகு நான் நேரில் சென்று அவரிடம் நடந்த எல்லாவற்றையும் கூறினேன். பிறகு நாங்கள் இப்போது நன்றாக பழகி வருகிறோம். அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம் என உதயநிதி கூறி இருக்கிறார்.

To Top